காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

3 பிஎச்கே டப்பிங்கிலேயே அழுதுவிட்டேன்: சரத் குமார்

3 பிஎச்கே படம் குறித்து சரத் குமார் பேசியுள்ளார்...

நடிகர் சரத் குமார்

Published On :

3 பிஎச்கே திரைப்படத்திற்கான டப்பிங்கின்போதே அழுதுவிட்டதாக நடிகர் சரத் குமார் தெரிவித்துள்ளார்.

நடிகர் சித்தார்த் நாயகனாக நடிக்க சரத் குமார், தேவயானி, மீத்தா ரகுநாத் உள்ளிட்டோர் நடித்த 3 பிஎச்கே திரைப்படம் வருகிற ஜூலை 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கிய இப்படம் நடுத்தர வர்க்கக் குடும்பம் சொந்த வீடு கட்ட எவ்வளவும் சிரமங்களையும் அவமதிப்பையும் சந்திக்கின்றனர் என்பதை மையமாக வைத்து உருவாகியுள்ளது.

சில நாள்களுக்கு முன் வெளியான டிரைலரும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய நடிகர் சரத் குமார், “தமிழ், தெலுங்கு மொழிகளில் 3 பிஎச்கே படத்திற்கான டப்பிங்கிலேயே அழுதுவிட்டேன். படம் அந்த எமோஷன்களை நன்றாகக் கடத்துகிறது." எனத் தெரிவித்துள்ளார்.

Summary

actor sarathkumar about 3 bhk movie

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.