
நடிகை ஜனனி அசோக்குமார் முதன்மை பாத்திரத்தில் நடித்துவரும் இதயம் தொடர் விரைவில் நிறைவடையவுள்ளது.
650 நாள்களுக்கு மேல் ஒளிபரப்பாகியுள்ள இத்தொடரின் இறுதிக் காட்சிகள் பிரமாண்டமான முறையில் உணர்வுப்பூர்வமாக உருவாக்கப்பட்டு வருகிறது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் இதயம் தொடர் மக்கள் மனங்களைக் கவர்ந்த தொடர்களில் ஒன்றாக உள்ளது. மக்களை ஈர்க்கும் கதைக்களத்தில் உணர்வுப்பூர்வமான காட்சிகள், திருப்பங்கள் என ரசிகர்களை தக்கவைத்துக்கொள்ளும் வகையில் ஒவ்வொரு வாரமும் ஒளிபரப்பாகிவருகிறது.
இத்தொடரில் நடிகை ஜனனி அசோக்குமார் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். அவரின் வசிகரமான தோற்றம் மற்றும் நடிப்பு மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இவருக்கு ஜோடியாக ரிச்சர்ட் ஜோஷ் நடிக்கிறார்.
இதோடு மட்டுமின்றி தொடரில் நடிக்கும் துணை பாத்திரங்களும் இத்தொடரின் நீடித்த வெற்றிக்கு முக்கிய காரணம் எனக் கூறலாம்.
இத்தொடருக்கு சரவணன் திரைக்கதை எழுத ராஜ்குமார், வினோத் குமார் ஆகியோர் இயக்குகின்றனர். மேலும், காட்சி அமைப்பிலும் மெனக்கெடுவதால் தொழில்நுட்ப ரீதியிலும் இத்தொடர் மற்ற தொடர்களைக் காட்டிலும் சிறந்ததாக உள்ளது.
காரனீஸ்வரன் ஒளிப்பதிவு செய்ய, அர்ஜுன் கார்த்திக், உதயசந்திரன் ஆகியோர் படத்தொகுப்பு செய்கின்றனர். பக்குவப்பட்ட காதல் கதை என்பதால் இதயம் தொடரில் பின்னணி இசையும் குறிப்பிடத்தகுந்ததாகவே உள்ளது.
இவ்வாறு மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற இதயம் தொடர் விரைவில் முடியவுள்ளது. 2023 ஆக்ஸ்ட் முதல் ஒளிபரப்பாகிவரும் இத்தொடர் இதுவரை 650 நாள்களைத் தாண்டி ஒளிபரப்பாகிவருகிறது.
இத்தொடரின் இறுதிக் கட்ட காட்சிகளில் இருக்கும் திருப்பங்களுக்கும் நிறைவுப் பகுதிக்கும் மக்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இத்தொடர் முடிவடையும் நாள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.
இதையும் படிக்க | ஞாயிறு வேலைக்குச் செல்வதைப் புகழ்ந்த மணிமேகலை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.