
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் புகழ் பெற்ற நடிகை காவ்யா அறிவுமணி, 3வது படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவர், நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்டி சுப்பிரமணியத்துக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
சினிமாவில் செல்ல வேண்டும் என்ற கனவோடு சின்ன திரையில் நடித்துவந்த காவ்யா அறிவுமணிக்கு தற்போது அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியுள்ளன.
2022-ல் மிரள் படத்தில் ஹேமா என்ற பாத்திரத்தில் நடித்த காவ்யா, 2023ஆம் ஆண்டு ரிப்பப்பரி என்ற படத்தில் பாரதி என்ற பாத்திரத்தில் நடித்து அசத்தினார். இந்த இரு படங்களைத் தொடர்ந்து தற்போது 3வது படத்தில் நட்டிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா தொடரில் தனது நடிப்புப் பயணத்தை தொடங்கினார் காவ்யா. 2020ஆம் ஆண்டு விஜே சித்ரா மறைவுக்குப் பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை பாத்திரத்தை ஏற்று நடித்தார்.
விஜே சித்ராவால் மிகவும் பேசப்பட்ட முல்லை பாத்திரத்திற்கு தனது நடிப்புத் திறமையால் ஈடுகொடுத்திருந்தார். இதனால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற காவ்யா, சின்ன திரை ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமடைந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மட்டுமல்லாமல், ஒருசில தொடர்களில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தும் ரசிகர்களுக்கு ஆச்சரியமளித்துள்ளார். தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி மற்றும் தமிழும் சரஸ்வதியும் ஆகிய இரு தொடர்களில் சிறப்புத் தோற்றத்திலும் நடித்துள்ளார்.
தற்போது காவ்யா அறிவுமணியின் புதிய பட வாய்ப்புக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். சின்ன திரையில் நடித்து வெள்ளித்திரையில் அசத்திவரும் நடிகைகளில் காவ்யா அறிவுமணியும் இணைந்துள்ளதாக ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | சின்ன திரையில் சிறந்த பெண்கள் யார்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.