
சின்ன திரையில் பல்வேறு பிரிவுகளில் பணிபுரியும் பிரபலங்களில் சிறந்த பெண்கள் யார் என்பது குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.
நிகழ்ச்சித் தொகுப்பாளர், தொடர் நாயகி, குணச்சித்திர நடிகை, நகைச்சுவை நாயகி உள்ளிட்ட பல பிரிவுகளில் சின்ன திரையில் பணிபுரியும் பெண்களில் சிறந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விருதுகளை எஸ்.எஸ். மியூசிக் நிறுவனம் வழங்கியுள்ளது. அந்த நிறுவனத்தைச் சேர்ந்த குழுவினரே சின்ன திரையில் இந்த ஆண்டுக்கான சிறந்த பெண்களைத் தேர்வு செய்துள்ளது.
இதில், இந்த ஆண்டின் சிறந்த பெண்களுக்கான விருதை பிரியங்கா தேஷ்பாண்டே,
சைத்ரா ரெட்டி
லட்சுமி பிரியா
நிகிதா ராஜேஷ்
நிரோஷா
கோமதி பிரியா
சல்மா அருண்
ஜாக்குலின்
உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர்.
சின்ன திரையில் சிறப்பாக செயல்பட்டதற்காகவும், தங்கள் பணியின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்ததற்காகவும் இவர்களுக்கு இந்த ஆண்டின் சிறந்த பெண்கள் விருது வழங்கப்பட்டது.
இதையும் படிக்க | திருமணமே வேண்டாம்: எதிர்நீச்சல் நாயகியின் வைரல் விடியோ!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.