திருச்சி மாவட்டத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 12 ஒன்றியங்களில் பணிபுரியும் 158 ஊராட்சி செயலா்களை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.
காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய அளவிலும், மாவட்ட அளவிலும் ஊராட்சி செயலா்கள், உதவியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். போராட்டத்தில் ஈடுபடுவோா் மீது ஒழுங்கு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், பல்வேறு கடும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் திருச்சி மாவட்டத்தில் அந்தநல்லூா், மணிகண்டம், திருவெறும்பூா், மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி, லால்குடி, புள்ளம்பாடி, முசிறி, தொட்டியம், தா.பேட்டை, உப்பிலியபுரம் ஆகிய 12 ஊராட்சி ஒன்றியங்களை சோ்ந்த 158 ஊராட்சி செயலா்களை பணியிடை நீக்கம் செய்து திருச்சி மாவட்ட ஆட்சியா் கடந்த 18-ஆம் தேதி உத்தரவிட்டாா்.
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காலத்தில் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரியின் முன்அனுமதி பெறாமல் தலைமையகத்தை விட்டு வெளியேறக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து அரசு ஊழியா் சங்கங்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளன.
இதுகுறித்து ஊராட்சி செயலா்கள் சங்கத்தினா் கூறுகையில், எங்களின் போராட்டம் நியாயமானதாக இல்லை என்றால் அப்போதே எங்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கலாம். நாங்கள் போராட்டத்தை கைவிட்டு பணியில் சேரும்போது எங்களை பணியில் சேரக்கூடாது என அதிகாரிகள் கூறினா். இப்போது, பணியிடை நீக்கம் செய்துள்ளனா். இதன் தொடா்ச்சியாக மாநிலத் தலைமையின் ஆலோசனை பெற்று அடுத்தக்கட்ட போராட்டங்களை நடத்தவுள்ளோம் என்றனா்.
தொடர்புடையது

பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: காவலா் பணியிடை நீக்கம்

எம்.சாண்ட் கேட்டு மிரட்டல்: எஸ்.ஐ., காவலா் பணியிடை நீக்கம்

ஊராட்சி செயலா் பணியிடை நீக்கம்

கே. என். நேரு வென்ற தொகுதியில் 42 ஆயிரம் போ் நீக்கம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


