இறந்துவரும் ஹிந்தி சினிமா..! தேசிய விருதுபெற்ற இயக்குநர் புலம்பல்!

இன்றைய பாலிவுட் சினிமா குறித்து தேசிய விருதுபெற்ற இயக்குநர் வேதனை...
இயக்குநர் ஹன்சல் மேத்தா.
இயக்குநர் ஹன்சல் மேத்தா. படம்: எக்ஸ் / ஹன்சல் மேத்தா
Published on
Updated on
1 min read

தேசிய விருதுபெற்ற பாலிவுட் இயக்குநர் ஹன்சல் மேத்தா ஹிந்தி சினிமா இறந்துகொண்டுள்ளதாகக் கூறுவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக நீண்ட பதிவு எழுதியுள்ளார்.

கரோனா தொற்றுக்குப் பிறகு உலக அளவில் திரைத்துறையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக இந்திய அளவில் நல்ல படங்களுக்கு மதிப்பு கூடியுள்ளன.

முன்னதாக இந்தியாவில் கலக்கி வந்த ஹிந்தி சினிமா தற்போது பின்னடைவை சந்தித்துள்ளது. தென்னிந்திய சினிமாக்கள் அபார வளர்ச்சி அடைந்துள்ளன.

இந்நிலையில் பாலிவுட் இயக்குநர் ஹன்சல் மேத்தா தனது எக்ஸ் பக்கத்தில் ஹிந்தி சினிமா இறக்கவில்லை சீர்குழைந்து விட்டதென வேதனையுடன் கூறியுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அவர் கூறியதாவது:

ஹிந்தி சினிமா இறந்துகொண்டிருக்கிறதா?

ஹிந்தி சினிமாவுக்கு ரீஸ்டார்ட் தேவை. அது சாகவில்லை, சீர்குலைந்துவிட்டுள்ளது. பிரச்னை பார்வையாளர்கள் ஆர்வத்தை இழக்கவில்லை. ஒரேமாதிரி படத்தை எடுப்பதுதான். வருங்கால ஹிந்தி சினிமா திறமை, தைரியமான கதை சொல்லல் முறையில் இருக்க வேண்டும்.

கடந்த சில வருடங்களாக பார்வையாளர்களை திரட்ட பெரிய நடிகர்கள் தேவையில்லை என்பது உறுதியாகியுள்ளது. ஆனால், நல்ல கதை அதை செய்கிறது.

புதிய தலைமுறை நடிகர்கள், இயக்குநர்கள், திரைக்கதை ஆசிரியர்கள் ஆட்டத்தை மாற்ற தயாராக இருக்கிறார்கள். ஆனால், இதற்கு நல்ல தயாரிப்பாளர்கள் வேண்டும்.

முறையாக நிதி செயல்பாடுகள், திறமையான மார்க்கெட்டிங் இருந்தால் போதுமானது. எனக்குத் தெரிந்த நல்ல சில நடிகர்கள், இயக்குநர்களை இங்கு கூறவிருக்கிறேன்.

சில திறமைசாளிகள்

ஆதர்ஷ் கௌரவ் - ஆட்டத்தை மாற்றியவர்

வேதாங் ரெய்னா - திரை ஈர்ப்பாளர்

இஷான் கட்டர் - வெடிக்காத டைனமோ

ஜஹான் கபூர் - முக்கிய கண்டுபிடிப்பு

ஆதித்யா ரவால் - சீர்குலைப்பவர்

ஸ்பார்ஷ் ஷிவஸ்டாவ் - அமைதியான புரட்சி

அபய் வர்மா - வைல்ட்கார்ட் (ஜோக்கர்)

லக்‌ஷயா - சோர்வடையாத வீரர்

ராகவ் ஜுயல் - கணிக்க முடியாத வைல்ட்கார்ட்

திறமைசாலிகள் மீது நம்பிக்கை வையுங்கள்

இவற்றில் எது இல்லாமல் பேகிறது? நம்பிக்கை. மூலதனம். பொறுமை. தயாரிப்பாளர்கள் நீண்ட கால நோக்கில் முடுவுகளெடுக்க வேண்டும்.

வார இறுதி பாக்ஸ்-ஆபிஸ்களை தேடுவதை நிறுத்திக்கொண்டு நல்ல திறமைசாளிகளை வளர்த்தால் ரசிகர்கள் தானாக திரையரங்கிற்கு வருவார்கள். திறமைசாலிகள் மீது நம்பிக்கை வையுங்கள்.

மிகப்பெரிய நடிகர்கள் மீது அதிக பணம் செலவளிக்காமல் திறமைசாலிகள் மீது செலவளியுங்கள். ஹிந்தி சினிமாவுக்கு தேவை - முக்கியத்துவ மாற்றம். பயமில்லாமல் எழுதுங்கள். குழப்பமில்லாமல் இயக்குங்கள். நல்ல நம்பிக்கையில் எழுதுங்கள். எதாவது தவறு, அல்லது விடுபடல் இருந்தால் மன்னிக்கவும் எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com