இந்தியரா இவர்? உலக ரசிகர்களைக் கிறங்கடிக்கும் ஹனுமன்கைண்ட்!

மலையாளப் பாடகர் ஹனுமன்கைண்ட் வெளியிட்ட புது ஆல்பம் குறித்து...
ஹனுமன்கைண்ட்
ஹனுமன்கைண்ட்
Published on
Updated on
1 min read

ஹிப்ஹாப் இசைக்கலைஞரான ஹனுமன்கைண்ட் வெளியிட்ட புதிய ஹிப்ஹாப் பாடல் ஹிட் அடித்துள்ளது.

உலகம் முழுவதும் ராப் இசைக்கென கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருக்கின்றனர். பெரும்பாலும் ஆங்கில பாடல் வரிகளில் உருவாகும் இந்தப் பாடல்களைக் கேட்க இந்தியா போன்ற நாடுகளிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

தமிழிலும் ஆத்திச்சூடி, போர்க்களம் (ஆடுகளம்), உள்ளிட்டவை ராப் பாடல்களாக உருவானவையே. ஆனால், இவை அசல் ராப் பாடல்கள் எனச் சொல்ல முடியாது. ராப் இசையைத் தொடர்ந்து கேட்கும் ரசிகர்கள் இதிலுள்ள சிக்கல்களையும் கவனிப்பதால் சினிமாவில் உருவாகும் ராப் பாடல்கள் பெரிதாகக் கவனம் பெறுவதில்லை.

இவற்றில், சினிமாவைத் தாண்டி கேளிக்கை விடுதிகள், இசைக்கச்சேரிகளில் பாடும் சுயாதீன ராப் இசைக்கலைஞர்களும் உண்டு.

அப்படி, கேரளத்தின் மலப்புரத்தைச் சேர்ந்த சூரஜ் சேருகத் என்பவர் ஹனுமன்கைண்ட் (hanumankind) என்கிற பெயரில் ஹிப்ஹாப் பாடகராக இருக்கிறார். (ஹனுமன்கைண்ட் என்றால், தன் கலாச்சாரத்தின் பலத்தை வெளிப்படுத்த கடவுள் ஹனுமனையும், எல்லாரும் சமம்தான் என அன்பைக் குறிக்க hanuman kind ஆக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டவர்.)

இவரே எழுதி, இசையமைத்து, பாடி ஆல்பங்களை வெளியிடுவார். யூடியூப்பில் இவரது பாடல்களைப் பலரும் கவனித்து வருகின்றனர்.

சில மாதங்களுக்கு முன் ஹனுமன்கைண்ட் தன் பிக் டாக்ஸ் (bigdawgs) என்கிற ஹிப்ஹாப் ஆல்பத்தை வெளியிட்டார். இவரே எழுதி, இசையமைத்து, பாடி, நடனமாடிய இப்பாடல் உலகளவில் பெரிய வரவேற்பைப் பெற்றது.

முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் உருவான இப்பாடல் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க கண்டங்களைச் சேர்ந்தவர்களைப் பெரிதாக ஈர்த்ததால் மிகப்பெரிய பிரபல வெளிச்சத்திற்குள் சென்றார். அண்மையில், வெளியான ரைஃபில் கிளஃப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதையும் படிக்க: ரெட்ரோ டிரைலர் எப்போது?

இந்த நிலையில், தற்போது ஹனுமன்கைண்ட் ரன் இட் அப் (Run it up) என்கிற புதிய ஹிப்ஹாப் இசை ஆல்பத்தை வெளியிட்டுள்ளார். கேரள பண்பாட்டு பின்னணியில் உருவான இப்பாடல் உலகளவில் பல நாட்டு ரசிகர்களையும் ஈர்த்து வருகிறது.

பலரும் ஆச்சரியமாக, ’இந்தியாவிலிருந்து இப்படி ஒரு ராப்பரா?’, ‘இந்தியா தனது ஹிப்ஹாப் இதயத்தைக் கண்டடைந்துவிட்டது ‘ என வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். இப்பாடலை யூடியூப்பில் இதுவரை 77 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com