நடிகை பரினீதி சோப்ரா.
நடிகை பரினீதி சோப்ரா. படம்: எக்ஸ் / பரினீதி சோப்ரா.

சிசிடிவி காட்சிகளைப் பகிர்ந்த பரினீதி சோப்ரா..!

நடிகை பரினீதி சோப்ரா தனது சிசிடிவி காட்சிகளைப் பகிர்ந்துள்ளார்.
Published on

நடிகை பரினீதி சோப்ரா தனது சிசிடிவி காட்சிகளைப் பகிர்ந்துள்ளார்.

மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் வணிகம், பொருளாதாரம், பொருளியலில் பட்டம் பெற்றபின் 2011இல் நடிகையாக அறிமுகமானார் பரினீதி.

2012இல் நடித்த படத்துக்கு தேசிய விருது கிடைத்தது. பின்னர் 2023இல் திருமணம் செய்தார்.

கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ’அமர் சிங் சம்கிலா’ நல்ல வரவேற்பைப் பெற்றது.

சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார் பரினீதி சோப்ரா.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் நடிகை பரினீதி சோப்ரா தனது சொந்த சிசிடிவி காட்சிகள் என விடியோவை பகிர்ந்து பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

அதில் ஒரு குழந்தை ஆர்டர் செய்யப்பட்ட பொருள்கள் வருவதைப் பார்த்து மிகுந்த மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும். இதுதான் தன்னைப் பிரதிபலிப்பதாகக் கூறி பரினீதி ஸ்டோரி வைத்துள்ளார்.

பரினீதி சோப்ராவின் இன்ஸ்டா ஸ்டோரி.
பரினீதி சோப்ராவின் இன்ஸ்டா ஸ்டோரி.படம்: இன்ஸ்டா /பரினீதி சோப்ரா

இதற்கு சில நாள்கள் முன்பு தனது கணவரும் அரசியல்வாதியுமான ராகவ் சத்தாவின் விடியோவை பகிர்ந்து, “தன்னம்பிக்கையூட்டும் மனிதர்” எனக் கூறியிருந்தார்.

நடிகை மட்டுமல்லாமல் சமூக சேவகி, விளம்பர தூதர், தொழில்முனைவோர் என பல பரிணாமங்களில் இருக்கிறார்.

பரினீதி சோப்ரா பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com