பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

இதுவரை பகிராத புகைப்படங்கள்... செம்பருத்தி நினைவுகளைப் பகிர்ந்த நடிகை ஷபானா!

செம்பருத்தி தொடரின்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ரசிகர்களுடன் நடிகை ஷபானா பகிர்ந்துள்ளார்.

செம்பருத்தி தொடரின் தொடக்கத்தில் ஷபானா எடுத்துக்கொண்ட படங்கள் - படம் - இன்ஸ்டாகிராம்

Published On :9 பிப்ரவரி 2026, 4:54 pm IST

Sembaruthi Serial : செம்பருத்தி தொடரின்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நடிகை ஷபானா ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

அதில், தான் செம்பருத்தி தொடரின் ஆடிஷனில் கலந்துகொண்டபோது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் முதல், நிறைவடையும்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் வரை பகிர்ந்துள்ளார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 2017 முதல் 2022 வரை தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு செம்பருத்தி தொடர் ஒளிபரப்பானது. கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்த பெண், பணிபுரியும் வீட்டின் முதலாளி மகனையே திருமணம் செய்துகொள்ளும் சூழல் ஏற்படுகிறது. அதன் பிறகு அந்த வீட்டில் உள்ளவர்களை எதிர்கொண்டு அவர் சந்திக்கும் சவால்களை மையமாக வைத்து செம்பருத்தி தொடர் ஒளிபரப்பானது.

செம்பருத்தி தொடரில் ஷபானா

செம்பருத்தி தொடரில் ஷபானா - படம் - இன்ஸ்டாகிராம்

இத்தொடரில் நடிகை ஷபானா நாயகியாகவும், கார்த்திக் ராஜ் நாயகனாகவும் நடித்தனர். இத்தொடர் ஷபானாவுக்கு முதல் தொடர் என்றபோதிலும் தொடர்ந்து சிறப்பான நடிப்பை வழங்கி, பார்வதியாக மக்கள் மனதில் இடம்பிடித்தார்.

முதல் தொடரே தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு மேல் ஒளிபரப்பானதால், இத்தொடரில் நடித்த பலருக்கும் பெரிய அங்கீகாரமாக செம்பருத்தி தொடர் அமைந்தது.

இத்தொடருக்குப் பிறகு சன் தொலைக்காட்சியில் மிஸ்டர் மனைவி தொடரில் ஷபானா நடித்திருந்தார்.

செம்பருத்தி தொடரில் ஷபானா

செம்பருத்தி தொடரில் ஷபானா

பிறகு விஜய் தொலைக்காட்சியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களைக் கவர்ந்தார். தற்போது போலீஸ் போலீஸ் என்ற இணையத் தொடரில் ஷபானா நடித்து வருகிறார்.

செம்பருத்தி தொடரில் நாயகன் கார்த்திக் ராஜுடன் ஷபானா

செம்பருத்தி தொடரில் நாயகன் கார்த்திக் ராஜுடன் ஷபானா - படம் - இன்ஸ்டாகிராம்

இதனிடையே சமீபத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு செம்பருத்தி தொடரின் ஆடிஷனில் கலந்துகொண்ட புகைப்படம் உள்பட, அத்தொடரின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட பல புகைப்படங்களை ஷபானா பகிர்ந்துள்ளார்.

Summary

Zee tamil sembaruthi serial fame shabana shares memories with fans

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.