எந்த சூழலிலும் தவெகவுக்கு ஆதரவு இல்லை: கே.பி. முனுசாமிதமிழ்நாடு 16வது சட்டப்பேரவை கலைப்பு: ஆளுநர் அறிவிப்பு!ஆர்.பி. சௌத்ரி உடலுக்கு விஜய் நேரில் மரியாதை!ஆளுநருடன் விஜய் சந்திப்பு! ஆட்சியமைக்க உரிமை கோரினார்!
/

ஓஜி சம்பவம் புரோமோ!

குட் பேட் அக்லி முதல் பாடல் குறித்து...

News image
Updated On :17 மார்ச் 2025, 6:14 pm IST

குட் பேட் அக்லி முதல் பாடலின் புரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளனர்.

அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ’குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளியாக இன்னும் 24 நாள்களே உள்ள நிலையில் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

முக்கியமாக, படத்தின் முதல் பாடலான ’ஓஜி சம்பவம்’ நாளை (மார்ச். 18) மாலை 5.05 மணிக்கு வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், இப்பாடலின் புரோமோவை இன்று வெளியிட்டுள்ளனர். இப்பாடலை ஜி.வி. பிரகாஷ் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இணைந்து பாடியுள்ளனர்.

படத்தின் டீசர் வெளியாகி பலரிடமும் வரவேற்பைப் பெற்றதால் உறுதியாக இப்படம் ஹிட் அடிக்கும் என அஜித் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.