சாவித்ரியாக மாறும் துஷாரா விஜயன்: எஸ்.ஜே.சூர்யா
நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிகை துஷாரா விஜயனைப் பாராட்டி பேசியுள்ளார்.


நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிகை துஷாரா விஜயனை சாவித்ரி போல மிகப்பெரிய நடிகையாக மாறுவார் எனப் பாராட்டி பேசியுள்ளார்.
சித்தா பட இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் உருவாகியுள்ளது. நடிகர் விக்ரம் நடிப்பில் உருவான இந்தப் படத்தில் நடிகர்கள் எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு நடித்துள்ளார்கள்.
நாயகியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
சார்பட்டா பரம்பரை படத்தில் கவனம் ஈர்த்த துஷாரா விஜயன் தமிழில் முக்கியமான நடிகையாக மாறிவருகிறார்.
நேற்றிரவு நடைபெற்ற டிரைலர் வெளியீட்டு நிகழ்வில் எஸ்.ஜே.சூர்யா பேசியதாவது:
இயக்குநர் வசந்த் சார் என்னை பழையப் படங்களை அதிகமாகப் பார்க்கச் சொல்லுவார். அப்படிப் பார்க்கும்போது நடிகை சாவித்ரி எனக்கு மிகவும் பிடித்துப்போனார். அதேபோல துஷாரா விஜயனும் பெரிய இடத்துக்கு செல்ல வேண்டும்.
துஷாரா விஜயனும் இயக்குநரின் நடிகை. ராயனில் நாங்கள் ஒன்றாக நடித்தோம். இன்னும் பல படங்களில் ஒன்றாக நடிக்க வேண்டும் எனக் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...