எம்புரான் 3 நிமிட காட்சிகள் நீக்கம்!

எம்புரான் 3 நிமிட காட்சிகள் நீக்கம்!

எம்புரான் காட்சி நீக்கம்...
Published on

எம்புரான் திரைப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் நீக்கப்பட்டது.

எம்புரான் திரைப்படம் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இது லூசிபர் படத்தின் இரண்டாம் பாகம் என்பதால் மோகன்லால் - பிருத்விராஜ்ஜின் கூட்டணி ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது.

ஆனால், படம் கலவையான விமர்சனங்களையே பெற்றதால் பெரிய சாதனைகள் நிகழவில்லை. இருப்பினும், இதுவரை ரூ. 160 கோடிக்கும் மேல் வசூலித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே, இப்படத்தில் குஜராத் மதக்கலவரத்தைப்போல காட்சி ஒன்று இடம்பெற்றிருந்தது. இதனால், வலதுசாரிகள் எம்புரானைக் கடுமையாக விமரித்தனர்.

இதனால், ஏற்பட்ட சர்ச்சைகளால் நடிகர் மோகன்லால் படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய காட்சியை நீக்குவதாகத் தெரிவித்தார்.

இந்த நிலையில், இன்று முதல் எம்புரானில் சர்ச்சையை ஏற்படுத்திய 3 காட்சிகள் நீக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com