எதிர்பார்ப்பைத் தூண்டும் சிவராஜ்குமாரின் 45 டீசர்!

எதிர்பார்ப்பைத் தூண்டும் சிவராஜ்குமாரின் 45 டீசர்!

45 டீசர் வெளியானது....
Published on

நடிகர் சிவராஜ்குமார் நடித்த 45 படத்தின் டீசர் ரசிகர்களிடம் கவனம் ஈர்த்துள்ளது.

கன்னட திரையுலகின் நட்சத்திர நடிகரான சிவராஜ்குமார் ஜெயிலர் படத்தின் மூலம் தமிழக ரசிகர்களிடமும் பெரிதாகப் பிரபலமானார். பின், நேரடி தமிழ்ப் படமொன்றில் நாயகனாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதற்கிடையே, அவர் நடித்த கோஸ்ட், பைரதி ரணகல் படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

தொடர்ந்து, தன் சிறுநீர் பையில் புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டதாகவும் அதற்காக சிகிச்சை எடுக்க அமெரிக்கா செல்ல உள்ளதையும் சிவராஜ்குமார் தெரிவித்தார்.

இது ரசிகர்களிடம் கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. பின், அங்கு சிகிச்சை முடிந்து நலமாக வீடு திரும்பினார். தற்போது, தன் 131-வது படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கிடையே, சிவராஜ்குமார் இயக்குநர் அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் 45 என்கிற படத்தில் நடித்திருந்தார். இதில், உபேந்திரா, ராஜ் பி ஷெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பான் இந்திய மொழிகளில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர்.

டீசர் காட்சிகளைப் பார்க்கும்போது படம் ஃபேண்டசி கலந்த கதையாக உருவாகியுள்ளதால் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com