நெட்பிளிக்ஸால் இந்தியாவில் 2 பில்லியன் டாலர் வருமானம்!

நெட்பிளிக்ஸ் நிறுவனத்தினால் இந்தியர்களுக்கு ஏற்பட்ட நன்மை குறித்து...
நெட்பிளிக்ஸின் இணை தலைமை நிர்வாக அதிகாரி சர்ண்டோஸ்
நெட்பிளிக்ஸின் இணை தலைமை நிர்வாக அதிகாரி சர்ண்டோஸ்படம்: பிடிஐ
Published on
Updated on
1 min read

நெட்பிளிக்ஸ் ஓடிடியினால் இந்தியாவில் 2 பில்லியன் டாலர் (200 கோடி டாலர் அதாவது இந்திய மதிப்பில் 16,915 கோடி ரூபாய்) அளவுக்கு பொருளாதார இலாபம் அடைந்துள்ளதாக அதன் இணை தலைமை நிர்வாக அதிகாரி கூறியுள்ளார்.

முதல்முறையாக உலக ஆடியோ விடியோ என்டர்டெயின்மென்ட் சந்திப்பு (வேவ்ஸ்) மும்பையில் சமீபத்தில் தொடங்கியது. இதை இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்.

இதில் திரைத்துறைச் சார்பில் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

ஆமிர்கான் திரையரங்குகளில் அதிகமாக முதலீடு செய்ய வேண்டுமெனக் கூறினார்.

இந்த நிகழ்வில் நெட்பிளிக்ஸின் இணை தலைமை நிர்வாக அதிகாரி சரண்டோஸ் கூறியதாவது:

இந்தியாவில் 2 பில்லியன் டாலர் வருமானம்

2021 முதல் 2024வரை குறிப்பாக கரோனாவுக்குப் பிறகு இந்தியாவில் நாங்கள் அதிகமாக முதலீடு செய்தோம். எங்களது தயாரிப்புகளால் 20,000-க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகளுக்கு வாய்ப்புகள் கிடைத்துள்ளன.

இதன்மூலமாக நெட்பிளிக்ஸினால் இந்தியாவின் சுமார் 2 பில்லியன் டாலர் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

எங்களது தயாரிப்புகளால் 150 படங்கள், இணையத் தொடர்களை இந்தியாவின் 100க்கும் மேற்பட்ட இடங்களில் படப்பிடிப்பு செய்துள்ளோம்.

சினிமா கலாசாரம் மிகுந்த இந்தியா

இந்தியாவில் 9 ஆண்டுகளாக இயங்கி வருகிறோம். ஆனால், 7 ஆண்டுகளுக்கு முன்பாக வெளியான ’சாக்ரட் கேம்ஸ்’தான் எங்களது மிகப்பெரிய தொடக்கம்.

எங்களது வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு மிக முக்கியமானதென எங்களுக்குத் தெரியும். இந்தியர்களுடன் வேலைப் பார்ப்பதில் நான் எப்போதும் ஆவலுடன் இருக்கிறேன்.

இந்தியாவில் சினிமா கலாசாரம் சிறப்பாக இருக்கிறது. படங்களை ஆர்வமுடன் பார்த்து அதைப் பற்றி பேசுகிறார்கள். அதுதான் என்னை மிகவும் கவர்க்கிறது என்றார்.

இந்தியப் படங்களால் நெட்பிளிக்ஸுக்கு 30 சதவிகிதம் லாபம் கூடுதலாகக் கிடைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com