திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனுசென்னை புழல் சிறை முதல்வர் விஜய் திடீர் ஆய்வுமாநில அந்தஸ்து! பதவியை ராஜிநாமா செய்யவும் தயார்: புதுவை முதல்வர் என். ரங்கசாமிதிபெத்தில் அணை உடைந்தது! நேபாளத்துக்கு புதிய எச்சரிக்கை! மீட்புப் பணிகள் நிறுத்தம்!

பேரன்புடன், மெய்! இயக்குநர் பிரேம் குமாருக்கு கார் பரிசளித்த கார்த்தி!

மெய்யழகன் இயக்குநர் பிரேம் குமாருக்கு கார் பரிசளித்த கார்த்தி...

Published On :11 மே 2025, 10:51 am IST

நடிகர் கார்த்தி இயக்குநர் பிரேம் குமாருக்கு கார் ஒன்றைப் பரிசளித்துள்ளார்.

கார்த்தி - பிரேம் குமார் கூட்டணியில் உருவான மெய்யழகன் திரைப்படம் பல தரப்பட்ட ரசிகர்களையும் கவர்ந்தது. படத்தில் பேசப்பட்ட உறவுகளின் அருமையும் அன்பும் பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதால் தமிழ் சினிமாவின் நல்ல திரைப்படங்களில் ஒன்று என விமர்சன ரீதியாகவும் பாராட்டுகளைப் பெற்றது.

தற்போது, பிரேம் குமார் 96 படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கத் திட்டமிட்டுள்ளார்.

இந்த நிலையில், நடிகர் கார்த்தி மெய்யழகன் படத்திற்காக பிரேம் குமாருக்கு ரூ. 20 லட்சம் மதிப்புள்ள தார் ராக்ஸ் வகை கார் ஒன்றை நேரில் சென்று பரிசளித்துள்ளார். நடிகர் சூர்யாதான் படத்தின் தயாரிப்பாளர் என்பதால் அவரும் கார்த்தியும் இணைந்தே இக்காரை பரிசளித்துள்ளனர்.

காரை கண்டதும் மகிழ்ச்சியடைந்த பிரேம் குமார் கார்த்தியிடம் கையொப்பம் இடச் சொன்னார். கார்த்தி, “பேரன்புடன், மெய்” என எழுதினார். இந்த பரிசளிப்பு ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.