மண்சோறு சாப்பிட்டால் படம் வெற்றி அடையுமா? ரசிகர்களைக் கண்டித்த சூரி!

மண்சோறு சாப்பிட்ட ரசிகர்களின் செயலுக்கு நடிகர் சூரி கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.
நடிகர் சூரி
நடிகர் சூரி
Published on
Updated on
1 min read

மண்சோறு சாப்பிட்ட ரசிகர்களின் செயலுக்கு நடிகர் சூரி கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.

மாமன் படம் வெற்றியடைய சூரியின் ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்ட விடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. இதனைத் தொடர்ந்து நடிகர் சூரி இதற்கு தனது கடுமையான கண்டனத்தை முன்வைத்துள்ளார்.

இது குறித்து சூரி கூறியதாவது:

எனது கவனம்பெறவோ அல்லது படம் வெற்றியடையவோ மண் சோறு சாப்பிடுவது தவறான செயல்.

மண்சோறு சாப்பிட்டால் படம் ஓடிவிடுமா? கதை நன்றாக இருந்து நன்றாக எடுத்தால் வெற்றி அடையும். இப்படி முட்டாள்தனமாக மண்சோறு சாப்பிடாதீர்கள் தம்பிகளா. எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது.

நான் சாப்பாடு இல்லாமல் கஷடப்பட்டு இந்த இடத்துக்கு முன்னேறி வந்துள்ளேன். இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.

சோற்றை மதிக்காதவர்கள் எனது தம்பிகளாகவும் எனது ரசிகர்களாகவும் இருக்க தகுதியே இல்லை. அந்தப் பணத்தை வைத்துக்கொண்டு 4, 5 பேருக்கு சாப்பாடு எதாவது வாங்கிக் கொடுத்திருக்கலாமே?

படம் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் கூறிவரும் நிலையில் இந்தமாதிரியான செயல்கள் எனக்கு வருத்தமளிக்கிறது எனக் கூறினார்.

நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது முழுநேர நாயகனாக மாறியிருக்கிறார் சூரி. பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவான மாமன் திரைப்படம் இன்று (மே.16) திரையரங்குகளில் வெளியானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com