வள்ளியின் வேலன் தொடர்: இறுதிநாள் படப்பிடிப்பில் காதல் ஜோடி உருக்கம்!

நாயகன் சித்துவும் நாயகி ஸ்ரேயாவும் ஒன்றாக புகைப்படம் எடுத்துக்கொண்டு ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளனர்.
சித்து - ஸ்ரேயா
சித்து - ஸ்ரேயாஇன்ஸ்டாகிராம்
Published on
Updated on
1 min read

வள்ளியின் வேலன் தொடர் விரைவில் முடியவுள்ளது. இத்தொடரின் இறுதிநாள் படப்பிடிப்பில் நாயகன் சித்துவும் நாயகி ஸ்ரேயாவும் ஒன்றாக புகைப்படம் எடுத்துக்கொண்டு ரசிகர்களுடன் இதனைப் பகிர்ந்துள்ளனர்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் வள்ளியின் வேலன் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. ஸ்ரேயா அஞ்சன் நாயகியாகவும், சித்து நாயகியாகவும் நடிக்கும் இத்தொடர், கிராமத்துப் பின்னணியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்றாக உள்ளது.

பணக்கார வீட்டில் பிறந்த நாயகி அப்பாவின் பாசத்தைப் பெறுவதற்காகப் போராடுகிறார். அவரிடன் உதவியாளராகப் பணிபுரியும் வேலன் இதற்கு எப்படி உதவுகிறார் என்பதை கதைக்களமாகக் கொண்டது வள்ளியின் வேலன் தொடர்.

இத்தொடரின் வள்ளி என்ற பாத்திரத்தில் ஸ்ரேயாவும் வேலன் என்ற பாத்திரத்தில் சித்துவும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக அளித்து வந்தனர். இவர்களோடு மட்டுமின்றி துணைப் பாத்திரங்களான சாக்‌ஷி சிவா, கன்யா பாரதி, நிமிஷா, ஹரி கிருஷ்ணன், இந்திரா ரவிச்சந்திரன் ஆகியோரின் நடிப்பும் இத்தொடருக்கான பார்வையாளர்களைத் தக்கவைத்து வருகிறது.

சித்து பகிர்ந்த புகைப்படம்
சித்து பகிர்ந்த புகைப்படம்

ஸ்ரேயாவும் - சித்துவும் நிஜ வாழ்க்கையிலும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் என்பதால், வள்ளியின் வேலன் தொடரில் இவர்களின் நடிப்பு கச்சிதமாகப் பொருந்தியிருந்தது. இந்நிலையில், விரைவில் நிறைவடையவுள்ளதாகத் தெரிகிறது.

இத்தொடரின் இறுதிநாள் படப்பிடிப்பில் கணவன் - மனைவி இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் சித்து பகிர்ந்துள்ளார். இதனால், இத்தொடர் விரைவில் நிறைவடைவது உறுதியாகியுள்ளது.

இதையும் படிக்க | மனசெல்லாம் தொடரில் இருந்து விலகிய நாயகன்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com