தக் லைஃப் பாடலில் சுகர் பேபி சர்ச்சையா? நாளை வெளியாகிறது!

தக் லைஃப் படத்தில் த்ரிஷா, கமல் கதாபாத்திரங்களுக்கு இடையேயான உறவு குறித்து...
த்ரிஷா, கமல்.
த்ரிஷா, கமல். படங்கள்: ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷ்னல்
Published on
Updated on
1 min read

தக் லைஃப் திரைப்படத்தில் நடிகை த்ரிஷா, நடிகர் கமல் கதாபாத்திரங்களுக்கு இடையேயான சுகர் பேபி உறவு பேசுபொருளாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

மணிரத்னம் இயக்கியுள்ள தக் லைஃப் படத்தில் கமல், சிம்பு, த்ரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

இந்தப் படத்தின் டிரைலர் கடந்த மே.17ஆம் தேதி வெளியானது. அதில் நடிகை த்ரிஷாவுடன் கமல் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் பேசுபொருளாகின.

சமூக வலைதளங்களில் சிம்பு ரசிகர்கள் ”என்ன ஆண்டவரே இது?” என கிண்டல் செய்து வந்தனர்.

இந்நிலையில், படத்தின் 2-ஆவது பாடல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் த்ரிஷாவை குறிப்பிட்டு சுகர் பேபி (Sugar Baby) என்ற பாடல் நாளை (மே.21) வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

மணிரத்னம் படங்களில் அதிரடியாக காதல் காட்சிகள் இடம்பெறுவது வழக்கம். ’அலைபாயுதே’ படத்தில் தாலியை கழற்றி வைத்த ஷாலினியின் காட்சிகளும் ’ஓகே கண்மணி’ படத்தில் லிவ்விங் டூ கெதர் முறையையும் காட்சிபடுத்தி பேசுபொருளாக்கினார்.

சுகர் டாடி என்பது இளம் பெண்ணுடன் பொருளாதார, உடல் ரீதியான தேவைக்களுக்காக வாழும் வயதான ஓர் ஆணை குறிப்பதாகும்.

அதேபோல் சுகர் பேபி என்பது வயதான ஆணுடன் பொருளாதார, உடல் ரீதியான தேவைக்களுக்காக வாழும் ஒரு பெண்ணைக் குறிப்பதாகும்.

இந்த நவீன யுகத்தில் குறிப்பாக நகரங்களில் இந்த சுகர் டாடி, சுகர் பேபி கலாசாரங்கள் அதிகரித்து வருகின்றன.

தக் லைஃப் படத்தில் இந்த சுகர் பேபி விஷயம் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

மணிரத்னம், கமல் இணையும் படத்தில் இந்த அளவுக்குக்கூட சர்ச்சை, புதுமை இல்லையெனில் ரசிகர்களுக்கு என்ன இருந்துவிடப் போகிறது? என கமல் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

இந்தப் படம் ஜூன் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com