சண்முக பாண்டியன் நடிப்பில் உருவான படை தலைவன் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய்காந்த்தின் மகன் சண்முக பாண்டியன் படை தலைவன் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
ஜகநாதன் பரமசிவம் தயாரித்துள்ள இந்தப் படத்தை யு. அன்பு எழுதி இயக்கியுள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார்.
இதில் கஸ்தூரி ராஜா, யாமினி சுந்தர், முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யானைக்கும் மனிதனுக்கும் இடையேயான பாசப் போராட்டமாக இப்படம் உருவாகியுள்ளது.
அதிரடி ஆக்சன் நிறைந்த காட்சிகளால் நிறைந்த படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் கவனம் பெற்றது. இந்த நிலையில், இப்படம் மே 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், போதிய திரைகள் கிடைக்காததால் இப்படத்தின் வெளியீட்டுத் தேதி ஒத்திவைப்பதாகவும் விரைவில் புதிய தேதி அறிவிக்கப்படும் என சண்முக பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: இலங்கையில் மதராஸி படப்பிடிப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
கர வெளியீட்டு போஸ்டர்!
கர வெளியீட்டுத் தேதி!
பிரியங்கா மோகனின் மேட் இன் கொரியா வெளியீட்டுத் தேதி!
பெத்தி புதிய வெளியீட்டுத் தேதி!
வீடியோக்கள்

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

Ravindran Duraisamy Interview | விஜய்க்கு ரஜினி ஸ்டைலில் பதிலடி | TVK Vijay | Rajini | Aadhav Arjuna
தினமணி வீடியோ செய்தி...

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

