/

நவீன் பொலிஷெட்டி படத்தை இயக்குகிறேனா? மணிரத்னம் பதில்!

தன் அடுத்த படம் குறித்து மணிரத்னம் பேசியுள்ளார்...

News image
Updated On :27 மே 2025, 2:45 pm IST

இயக்குநர் மணிரத்னம் தன் அடுத்த படம் குறித்து பேசியுள்ளார்.

தக் லைஃப் படத்திற்குப் பின்னர் இயக்குநர் மணிரத்னம் பிரபல தெலுங்கு நடிகர் நவீன் பொலிஷெட்டியை கதாநாயகனாக வைத்து காதல் கதை ஒன்றை இயக்கவிருப்பதாகக் கூறப்பட்டது.

தக் லைஃப் படம் வெளியானதும் நவீன் பொலிஷெட்டி நடிக்கவுள்ள படத்தின் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய மணிரத்னம், “தக் லைஃப் திரைப்படத்திற்குப் பின் என்ன படம் எடுக்கப்போகிறேன் என எனக்கே தெரியவில்லை. நான் சில திரைக்கதைகளை எழுதி வருகிறேன். ஆனால், அடுத்த படம் காதல் படமாக இருக்காது.” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், நவீன் பொலிஷெட்டியை இயக்குவதாகக் கூறுகிறார்கள் அதுகுறித்து எதுவும் எனக்குத் தெரியாது என்றும் பதிலளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.