இவர்கள்தான் அடுத்த 100 ஆண்டுகள் தமிழ் சினிமாவை ஆளப்போகும் நடிகர்கள்: மிஷ்கின்

இளம் நடிகர்கள் குறித்து மிஷ்கின் பேச்சு...

இயக்குநர் மிஷ்கின் உடன் நடிகர்கள் ரிஷிகாந்த், சனந்த்

Updated On :

இயக்குநர் மிஷ்கின் தமிழ் சினிமாவின் வளர்ந்துவரும் நடிகர்கள் குறித்து பேசியுள்ளார்.

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவான டிரெயின் திரைப்படம் டிச. 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. நடிகர் விஜய் சேதுபதி நாயகனாவும் ஷ்ருதி ஹாசன், நரன், நாசர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். ஒரே இரவில் ஓடும் ரயிலில் கதை நிகழ்வதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் முன்வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்ட இயக்குநர் மிஷ்கின் டோரதி மூலம் கவனம் பெற்ற நடிகர்கள் ரிஷிகாந்த் மற்றும் சனந்தைக் குறிப்பிட்டு பேசும்போது, “நடிகர்கள் ரிஷிகாந்த்தையும் சனந்தையும் நான் அழைத்து என் திரைப்படத்தை ஆசிர்வதிக்கச் சொன்னேன். இந்த இருவரும்தான் அடுத்த 100 ஆண்டுகள் தமிழ் சினிமாவின் ஆளப்போகிறவர்கள். அது எனக்குத் தெரியும்” என்றார்.

தொடர்ந்து, பேசிய நடிகர் சனந்த், “எல்லாரும் டிரெயினில் இடம் பிடிப்போம். இந்த டிரெயின் நம் மனங்களில் இடம் பிடிக்கட்டும்” என்றார். நடிகர் ரிஷிகாந்த், “ஒரு ரசிகனாக டிரெயின் திரைப்படத்திற்காகக் காத்திருக்கிறேன். என்னை அழைத்ததற்கு மிக்க நன்றி” எனத் தெரிவித்தார்.

Director Mysskin has spoken about the emerging actors in Tamil cinema.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.