இறப்பதற்கு முன்பே தனக்கு கல்லறை கட்டிய ராஜேஷ்!

நடிகர் ராஜேஷ் தனக்கு கல்லறை கட்டியுள்ளார்...
நடிகர் ராஜேஷ்
நடிகர் ராஜேஷ்
Published on
Updated on
1 min read

நடிகர் ராஜேஷ் இறப்பதற்கு முன்பே தனக்கு கல்லறை கட்டியதாகத் தெரிவித்திருந்தார்.

நடிகர் ராஜேஷ் உடல்நலக்குறைவால் இன்று சென்னையில் காலமானார். அவரது மறைவிற்கு திரைத்துறையினர், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இவரது உடல் வருகிற ஜூன் 1 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நல்லடக்கம் செய்யப்படும் என குடும்பத்தினர் கூறியுள்ளனர். ராஜேஷின் மகள் அமெரிக்காவிலிருந்து வர வேண்டும் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

இந்த நிலையில், மறைந்த நடிகர் ராஜேஷ் பேசிய பழைய நேர்காணல்களைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

அப்படி ஒரு நேர்காணலில், "மார்க்ஸிய புத்தகங்களைப் படித்துவிட்டு லண்டன் சென்றபோது காரல் மார்க்ஸின் கல்லறைக்குச் சென்றேன். அங்கிருந்து சென்னை திரும்பியதும், எனக்கான கல்லறையைக் கட்டினேன். முதலில் மார்பிள் வைத்து அதை உருவாக்கினோம்.

நீண்ட காலம் கழித்து அதில் பிளவு ஏற்பட்டதால் அதை இடித்துவிட்டு கிரனைட்டில் கட்டினேன். காரணம், மகனுக்கும் மகளுக்கும் எதற்கு சிரமம் கொடுக்க வேண்டும்? எனக்குப் பிடித்ததுபோல் சில பைபிள் வசனங்களுடன் என் கல்லறையைக் கட்டியிருக்கிறேன். இறந்தபின் எப்படி அமைய வேண்டும் என சொல்லவா முடியும்?” எனக் கூறியிருந்தது ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com