
நடிகர் ஃபஹத் ஃபாசிலுடன் இணைந்து நடிக்க ஆலியா பட் விருப்பம் தெரிவித்துள்ளார் .
நடிகை ஆலியா பட் ஹிந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கென நாயகிகளில் ஒருவரான இவர், நடிகர் ரன்பீர் கபூரைத் திருமணம் செய்து பெண் குழந்தைக்குத் தாயாக உள்ளார். தற்போது, நல்ல கதைகளாகத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய ஆலியா பட், “நடிகர் ஃபஹத் ஃபாசிலின் நடிப்பை மிகவும் மதிக்கிறேன். ஆவேஷம் எனக்கு பிடித்த திரைப்படங்களில் ஒன்று. ஃபஹத் நம்ப முடியாத மிகச்சிறந்த நடிகர். ஒருநாள் அவருடன் இணைந்து நடிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். இது ஃபஹத் ஃபாசில் ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: இறப்பதற்கு முன்பே தனக்கு கல்லறை கட்டிய ராஜேஷ்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.