மணிரத்னம் - சிம்பு கூட்டணியில் காதல் படம்?
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் காதல் கதையில் சிலம்பரசன் நடிக்கிறாரா?


இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் காதல் கதையில் சிலம்பரசன் நடிக்கவுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தெலுங்கு நடிகரான நவீன் பொலிஷெட்டி மற்றும் ஏஸ் பட நடிகையான ருக்மினி வசந்த் இருவரும் இணைந்து காதல் கதையில் நடிக்கவுள்ளதாக சமூக ஊடகங்களில் பேசப்பட்டு வந்தது.
இதுகுறித்து, இயக்குநர் மணிரத்னத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அதனை அவர் மறுத்தார். அவர் பேசியதாவது, இவர்கள் எதைப் பற்றி பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. அடுத்த படம் கிடைக்கும் என்று நம்புகிறேன். ஆனால், அது இது அல்ல.
நான் தொடர்ந்து யோசித்து வருகிறேன். இரண்டு கதைகளின் யோசனையில் இருக்கிறேன். ஆனால், எது முடிவடையும் என்று தெரியவில்லை. இன்று நம்பிக்கை தரக்கூடியது, நாளை மறைந்து விடும்.
ஆனால், அது ஒரு முழுமையான காதல் கதை அல்ல. இதுபோன்ற ஒரு காதல் கதையை உங்களால் உருவாக்க முடியாது. இது ஆண் மற்றும் பெண்ணுக்கும் மட்டுமல்ல; அதற்கும் மேலானது என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது சிலம்பரசன் மற்றும் ருக்மினி வசந்த் இருவரையும் வைத்து காதல் கதையை மணிரத்னம் இயக்கவுள்ளதாகவும், அதனை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது.
இதன் மூலம் இயக்குநர் மணிரத்னம் மற்றும் சிலம்பரசன் கூட்டணியில் மற்றுமொரு படம் உருவாகலாம் என்று கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...