உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

நாயகனான பூவையார்..! முதல்பார்வை போஸ்டர் ரிலீஸ்!

சூப்பர் சிங்கர் பூவையார் நாயகனாக நடிக்கும் புதிய படம் குறித்து...

Poster of the film Ram Abdullah Antony.

ராம் அப்துல்லா ஆண்டனி படத்தின் போஸ்டர். - படம்: எக்ஸ் / ஜான்சன் பிஆர்ஓ

Published On :30 மே 2025, 12:40 pm IST

சூப்பர் சிங்கர் பூவையார் நாயகனாக நடிக்கும் ராம் அப்துல்லா ஆண்டனி என்ற படத்தின் முதல்பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

அன்னை வேலாங்கன்னி ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்தினை ஜெயவேல் இயக்கியுள்ளார்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ்பெற்றவர் பூவையார். கானா பாடல்கள் அவரது அடையாளமாக இருக்கிறது.

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்யின் பிகில் படத்தில் பாடலில் நடனமாடி அறிமுகமானார்.

மீண்டும் விஜய்யுடன் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து கூடுதல் பிரபலமானார்.

மாஸ்டர் படம் நல்ல வரவேற்பைப் பெற்றதற்குப் பிறகு மகாராஜா, அந்தகன் படத்திலும் நடித்திருந்தார்.

தற்போது, நாயகனாக முன்னேறியுள்ளார். ராம் அப்துல்லா ஆண்டனி என்ற படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

குக் வித் கோமாளி சீசன் 6-இல் கோமாளியாகவும் பங்கேற்று வருவது கவனிக்கத்தக்கது.

படத்தின் போஸ்டர்.

படத்தின் போஸ்டர். - படம்: எக்ஸ் / ஜான்சன் பிஆர்ஓ

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.