நடிகர் கமல் ஹாசனின் தேவர் மகன் திரைப்படம் மறுவெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது.
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான திரைப்படங்களில் ஒன்றாகக் கருதப்படும் படம் தேவர் மகன். நடிகர் கமல் ஹாசன் கதை, திரைக்கதையில் உருவான இப்படம் இன்றும் திரை விமர்சகர்கள், ரசிகர்கள் மத்தியில் தனித்துவமான இடத்தையே பெற்றுள்ளது.
பரதன் இயக்கத்தில் 1992-ல் வெளியான இப்படத்தில் நடிகர் சிவாஜி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற சிவாஜியின் வசனங்கள் இன்றும் பிரபலமாகவே இருக்கின்றன.
இந்த நிலையில், இப்படத்தை மறுவெளியீடு செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றதாம். இதற்காக, 4கே தர மேம்பாடும் டப்பிங் பணிகளும் விறுவிறுப்படைந்துள்ளது.
மேலும், இசையமைப்பாளர் இளையராஜாவும் தேவர் மகனுக்கான புதிய இசைக்கோர்ப்புகளையும் மேற்கொள்கிறாராம். இதனால், இப்படம் அடுத்தாண்டு மறுவெளியீடாகும் எனத் தெரிகிறது.
இதையும் படிக்க: பாராட்டுகளைப் பெறும் பிரணவ் மோகன்லால் படம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.