பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய கலையரசன்!
பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் (4வது வாரம்) கலையரசன் வெளியேறியுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த 5 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. 10 ஆண்கள், 10 பெண்கள் இப்போட்டியில் பங்கேற்றிருந்த நிலையில், முதல் வாரம் தாமாகவே முன்வந்து நந்தினி வெளியேறினார்.
முதல் வார இறுதியில் இயக்குநர் பிரவீன் காந்தியும், இரண்டாவது வார இறுதியில் திருநங்கை அப்சராவும், மூன்றாவது வார இறுதியில் ஆதிரையும் குறைந்த வாக்குகளைப் பெற்றதால் வெளியேறினர்.
4வது வாரத்தில் 16 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தனர். இந்த வாரத்தில் அரோரா, கலையரசன், கானா வினோத், விஜே பார்வதி, கமுருதீன் ஆகிய 5 பேர் நாமினேஷன் செய்யப்பட்டிருந்தனர்.
இதில், குறைந்த வாக்குகளைப் பெற்றதற்காக கலையரசன் பிக் பாஸ் போட்டியில் இருந்து வெளியேறினார்.
அகோரியாக மக்களால் அறியப்பட்ட கலையரசன் அகோரி என்ற தனது அடையாளத்தை மாற்றிக்கொண்டு வெளியேற வேண்டும் என்பதையே நோக்கமாக வைத்து பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | பிக் பாஸ் 9: இதுதான் உங்கள் தராதரமா? திவாகரை எச்சரித்த விஜய் சேதுபதி
bigg boss 9 kalaiyarasan evicted
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

