

மீனவ சமூகத்தில் இருந்து வந்த சுபிக்ஷாவை குறித்தும் அவரின் சமூகம் குறித்தும் பேசியது நான்தான் என கமருதீன் ஒப்புக்கொண்டுள்ளார்.
சுபிக்ஷாவின் சமூகம் குறித்து பார்வதி பேசியதாக வைல்ட் கார்டு மூலம் நுழைந்தவர்கள் கூறிய நிலையில், அதனை மறுத்து அவ்வாறு பேசியது தான்தான் என கமருதீன் ஒப்புக்கொண்டது பலரின் பாராட்டைப் பெற்று வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சி அக். 5ஆம் தேதி பிரமாண்டமாகத் தொடங்கியது. 10 ஆண்கள், 10 பெண்கள் இப்போட்டியில் பங்கேற்றிருந்த நிலையில், முதல் வாரம் தாமாகவே முன்வந்து நந்தினி வெளியேறினார்.
முதல் வார இறுதியில் இயக்குநர் பிரவீன் காந்தியும், இரண்டாவது வார இறுதியில் திருநங்கை அப்சராவும், மூன்றாவது வார இறுதியில் ஆதிரையும் குறைந்த வாக்குகளைப் பெற்றதால் வெளியேறினர்.
தற்போது 16 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது 4 வாரங்களைக் கடந்துள்ளது. 5வது வாரத் தொடக்கத்தில் வைல்ட் கார்டு போட்டியாளர்களாக திவ்யா கணேசன், ப்ரஜின், சான்ட்ரா, அமித் பார்கவ் ஆகியோர் நுழைந்துள்ளனர்.
இவர்களின் முதல் நாளான இன்று கமருதீன் உடன் திவ்யா கணேசன், ப்ரஜின், சான்ட்ரா ஆகியோர் உரையாடுகின்றனர். அப்போது சுபிக்ஷாவின் சமூகம் குறித்து பார்வதி பேசியது சர்ச்சையானது எனக் குறிப்பிட்டனர்.
ஆனால், அதனை மறுத்த கமருதீன், சுபிக்ஷா குறித்தும் அவரின் சமூகம் குறித்தும் பார்வதி பேசவில்லை, தான்தான் பேசியதாகக் குறிப்பிட்டார். மீனவ சமூகத்தில் இருந்து வந்தவர் என்பதால் பலரின் இரக்கத்தைப் பெற சுபிக்ஷா முயற்சிப்பதாகவும், ஆனால் போட்டியின்போது மற்றவர்களை சூழ்ச்சி செய்து ஏமாற்றுவதாகவும் குற்றம் சாட்டினர்.
மீனவ சமூதாயத்தில் இருந்து இவ்வளவு பெரிய மேடையை எட்டிப்பிடித்துள்ளது பாராட்டத்தக்கதுதான், ஆனால், அதற்காக என்ன செய்தாலும் அதனை பொறுத்துக்கொள்ள வேண்டியதில்லை என கமருதீன் பேசியிருந்தார்.
இதனை வைல்ட் கார்டு போட்டியாளர்கள் பார்வதி பேசியதாகக் கூறியும், கமருதீன் அதனை மறுத்து உண்மையை ஒப்புக்கொண்டார். இதனால் சமூக வலைதளங்களில் கமருதீனின் நேர்மையை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிக்க | பிக் பாஸ் 9: இதுதான் உங்கள் தராதரமா? திவாகரை எச்சரித்த விஜய் சேதுபதி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.