விஜே பார்வதிக்கு சரியான போட்டியாளர் திவ்யா கணேசன்! ரசிகர்கள் கருத்து

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் விஜே பார்வதிக்கு சரியான நபராக திவ்யா கணேசன் மாறியுள்ளது குறித்து...
விஜே பார்வதி / திவ்யா கணேசன்
விஜே பார்வதி / திவ்யா கணேசன்படம் - எக்ஸ்
Published on
Updated on
1 min read

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் விஜே பார்வதிக்கு சரியான நபர் புதிதாக நுழைந்துள்ள திவ்யா கணேசன் தான் என ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிக் பாஸ் வீட்டில் எந்தவொரு விதிகளுக்குள்ளும் இருந்து போட்டியை கொண்டு செல்லாமல், விதிகளை மீறியும் சக போட்டியாளர்களை கோபப்படுத்தும் வகையிலும் விஜே பார்வதி செயல்பட்டு வருவதாக ரசிகர்கள் கூறிவரும் நிலையில், தற்போது இவருக்கு பதிலடி கொடுக்கும் நபராக திவ்யா கணேசன் மாறியுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி அக். 5ஆம் தேதி பிரமாண்டமாகத் தொடங்கியது. 10 ஆண்கள், 10 பெண்கள் இப்போட்டியில் பங்கேற்றிருந்த நிலையில், முதல் வாரம் தாமாகவே முன்வந்து நந்தினி வெளியேறினார்.

முதல் வார இறுதியில் இயக்குநர் பிரவீன் காந்தியும், இரண்டாவது வார இறுதியில் திருநங்கை அப்சராவும், மூன்றாவது வார இறுதியில் ஆதிரையும், நான்காவது வார இறுதியில் கலையரசனும் குறைந்த வாக்குகளைப் பெற்றதால் வெளியேறினர்.

இதனால், 15 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த நிலையில், 5வது வாரத் தொடக்கத்தில் வைல்ட் கார்டு போட்டியாளர்களாக திவ்யா கணேசன், ப்ரஜின், சான்ட்ரா, அமித் பார்கவ் ஆகியோர் நுழைந்துள்ளனர்.

இதில், பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்ததுமே வீட்டுத் தல என்ற கேப்டன் பொறுப்பை திவ்யா ஏற்றுள்ளார். இதனால், வீட்டைக் கட்டுக்கோப்புடன் நடத்துவது, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாக போட்டியை மாற்றுவது என தனது பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்.

இதனிடையே பிக் பாஸ் வரவேற்பரையில் அனைத்துப் போட்டியாளர்களுக்கும் போட்டிக்கான விதிகளைப் படிக்கும்போதும், டாஸ்குகளை செய்யும்போதும் விஜே பார்வதி அடிக்கடி நுழைந்து தனது கருத்துகளைப் பதிவு செய்து வந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திவ்யா கணேசனும் தனது கருத்துகளை குரல் உயர்த்தி முன்வைத்தார். பின்னர் சைகையில் அவரை அமைதியாக இருக்கும்படி கேலி செய்தார். இதனால், விஜே பார்வதி ஆத்திரமடைந்தார். இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க | பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த முன்னாள் போட்டியாளர்கள்!

Summary

Divya ganesan handled VJ parvathy in bigg boss 9 tamil

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com