பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த முன்னாள் போட்டியாளர்கள்!

பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த முன்னாள் போட்டியாளர்கள் குறித்து....
பிக் பாஸ் நிகழ்ச்சி
பிக் பாஸ் நிகழ்ச்சிபடம்: டிவிட்டர் / ஜியோ ஹாட்ஸ்டார்.
Published on
Updated on
1 min read

பிக் பாஸ் - 9 வீட்டுக்குள் முன்னாள் போட்டியாளர்கள் மூன்று பேர் வந்துள்ளனர். இது தொடர்பான அதிகாரப்பூர்வ முன்னோட்டக் காட்சி வெளியாகியுள்ளது.

கடந்த அக். 5 ஆம் தேதி தொடங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று(நவ. 4) 30 நாள்களை எட்டியுள்ளது. கடந்த சீசனை தொகுத்து வழங்கிய விஜய் சேதுபதியே, இந்த புதிய சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாட்டர் மெலன் ஸ்டார் என அழைக்கப்படும் திவாகர், அரோரா சின்கிளேர், பீட் பாக்ஸ் கலைஞர் எஃப்.ஜே. , விஜே பார்வதி, துஷார், கனி, சின்ன திரை நடிகர் சபரி, நடிகை கெமி, ரம்யா ஜோ, கானா வினோத், வியானா, சின்ன திரை நடிகர் பிரவீன், யூடியூபர் சுபிக்‌ஷா, விக்கல்ஸ் விக்ரம், கமுருதீன் 15 பேரும், வைல்டு கார்டு மூலம் சென்ற திவ்யா கணேசன், ப்ரஜின், சான்ட்ரா, அமித் பார்கவ் ஆகிய 4 பேரும் மொத்தம் 19 பேர் போட்டியாளர்களாக உள்ளனர்.

கடந்த வாரங்களில் நந்தினி, இயக்குநர் பிரவீன் காந்தி, திருநங்கை அப்சரா, ஆதிரை, கலையரசன் ஆகியோர் மக்களிடம் குறைந்த வாக்குகளைப் பெற்று வெளியேறினர்.

வைல்டு போட்டியாளர்களின் வருகையால் விளையாட்டு கொஞ்சம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. வைல்டு போட்டியாளர்கள் 4 பேரும், முன்னதாக நுழைந்த 15 பேரின் விளையாட்டை மாற்றியுள்ளனர்.

இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் வழக்கமாக நடத்தப்படும் ஹேட்டல் டாஸ்க்கின் விருந்தினர்களாக, இந்த நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளர்கள் பிரியங்கா, தீபக், மஞ்சரி ஆகியோர் உள்ளே சென்றுள்ளனர்.

வைல்டு கார்டு போட்டியாளர்கள் இரண்டு நாள்களே ஆன நிலையில், முன்னாள் போட்டியாளர்கள் சென்றுள்ளது, போட்டியை மேலும் ஸ்வாரசியப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரியங்கா, தீபக், மஞ்சரி ஆகியோர் கிட்டத்தட்ட 3 நாள்கள் வரை இருக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. டிஆர்பி கூட்டுவதற்காக இந்த புதிய முயற்சியில் பிக் பாஸ் குழு இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Three former contestants have entered the Bigg Boss 9 house.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com