

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற நடிகர் தீபக்கை கமருதீன் வரைந்து அசத்தியுள்ளார்.
நேரலையில் தீபக்கை அமர வைத்து உடனடியாக அவரை வரைந்துகாட்டிய விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 5 வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரத்தில் வைல்ட் கார்டு போட்டியாளர்களாக ப்ரஜின், சான்ட்ரா, திவ்யா கணேசன், அமித் பார்கவ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
5 வது வாரத்தை சுவாரசியமாக்கும் வகையில் ஹோட்டல் டாஸ்க் போட்டி வைக்கப்பட்டுள்ளது. இதில், ஹோட்டல் ஊழியர்களாக போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் பொறுப்பேற்று நடித்து வருகின்றனர். ஹோட்டல் விருந்தினர்களாக பிக் பாஸ் முன்னாள் போட்டியாளர்கள் தீபக், மஞ்சரி மற்றும் பிரியங்கா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
விருந்தினர்களை உபசரிக்கும் போட்டியாளர்களின் தன்மைக்கு ஏற்ப அவர்களுக்கு ஸ்டார்களை சிறப்பு விருந்தினர்களை வழங்குவார்கள். இதனால், தங்கள் பொறுப்புக்கு ஏற்ப விருந்தினர்களை பிக் பாஸ் போட்டியாளர்கள் உபசரித்து வருகின்றனர்.
இந்தப் போட்டியின் இரண்டாவது நாளான இன்று நடிகர் தீபக்கை கவரும் வகையில் அவரின் உருவத்தை தத்ரூபமாக கமருதீன் வரைந்து அசத்தியுள்ளார். அந்த ஓவியத்தை வியந்து பெற்றுக்கொண்ட தீபக், அதனை கேமரா முன்பு காட்டி ரசிகர்களுக்கும் கமருதீனின் திறமை குறித்துப் பேசினார்.
இத்தோடுமட்டுமின்றி பிக் பாஸ் வீட்டில் உள்ள சக போட்டியாளர்களுக்கும் ஓவியத்தைக் காட்டி கமருதீனை வெகுவாகப் பாராட்டினார். இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
நடிப்பு, நடனம், பாடல் என தனது திறமையை வெளிப்படுத்திக்கொண்டிருந்த கமருதீன், தற்போது தனது வரைகலை திறமையையும் வெளிப்படுத்தியுள்ளதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். இதற்கு முன்பு பிக் பாஸ் வீட்டில் அவர் வரைந்த ஓவியங்களும் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க | பிக் பாஸ் 9 நேரலையும் எடிட் செய்யப்படுகிறதா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.