

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் நேரலையும் படத்தொகுப்பு செய்யப்பட்ட பிறகே ஒளிபரப்பப்படுகிறதா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கடந்த சீசன்களை ஒப்பிடும்போது இந்த சீசனில், போட்டியாளர்கள் பலரும் அநாகரீக சொற்களைப் பயன்படுத்துவதால் நேரலை நிகழ்ச்சியும் படத்தொகுப்பு செய்யப்பட்ட பிறகே ஒளிபரப்பப்படுவதாக ரசிகர்கள் பலர் கருதுகின்றனர்.
இதனை மெய்ப்பிக்கும் விதமாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய (நவ. 5) நேரலை நிகழ்ச்சியில் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகரிடம் சுபிக்ஷா அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது, திடீரென சபரி அவர்களுக்கு பின்புறம் இருக்கிறார். இது எப்படி நடந்தது என ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த விடியோ சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு வரும் நிலையில், இருவர் பேசிக்கொண்டிருக்கும்போது நடுவில் திடீரென தோன்றும் சபரி, மாய வித்தைக்காரனாக இருப்பான் போல என கேலியாக ரசிகர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த மாதம் 5 ஆம் தேதி பிரமாண்டமாகத் தொடங்கியது. முதல் வாரத்தில் நந்தினி, இயக்குநர் பிரவீன் காந்தி, இரண்டாவது வாரத்தில் அப்சரா, மூன்றாவது வாரத்தில் ஆதிரை, நான்காவது வாரத்தில் கலையரசன் ஆகியோர் வெளியேறினர்.
தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டியாளர்களாக ப்ரஜின், சான்ட்ரா, திவ்யா கணேசன், அமித் பார்கவ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். தற்போது பிக் பாஸ் வீட்டில் ஹோட்டல் டாஸ்க் போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் ஒவ்வொரு வேடத்தை ஏற்று ஹோட்டல் ஊழியர்களாக நடித்து வருகின்றனர். இரவிலும் ஹோட்டல் டாஸ்க் போட்டி தொடரும் என பிக் பாஸ் அறிவித்திருந்தார்.
இதனால், ஊழியர்களாகவே திவாகரும் சுபிக்ஷாவும் நேரலையில் பேசிக்கொண்டு இருக்கும்போது நடுவில் திடீரென சபரி தோன்றுகிறார். இதனால், பிக் பாஸ் நேரலையும் படத்தொகுப்பு செய்யப்பட்டே ஒளிபாப்பாவது இதன்மூலம் உறுதியாவதாக பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | பிக் பாஸ் 9: நட்புக்கு எடுத்துக்காட்டாக மாறிய கமருதீன் - கானா வினோத்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.