பிக் பாஸ் 9 பிராங்க்: முகத்திரை கிழிந்த போட்டியாளர்கள் - உள்ளத்தால் உயர்ந்த வினோத்!

பிக் பாஸ் 9 நிகழ்ச்சியில் கமருதீன் - ப்ரஜின் - பிரவீன்ராஜ் ஆகியோரின் திட்டமிட்டு ஏமாற்றும் (பிராங்க்) செயலால் போட்டியாளர்கள் பலரின் முகத்திரை கிழிந்தது குறித்து...
கமருதீன் - ப்ரஜின் - பிரவீன்ராஜ் / கானா வினோத்
கமருதீன் - ப்ரஜின் - பிரவீன்ராஜ் / கானா வினோத்படம் - எக்ஸ்
Published on
Updated on
1 min read

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் கமருதீன் - ப்ரஜின் - பிரவீன்ராஜ் ஆகியோரின் திட்டமிட்டு ஏமாற்றும் (பிராங்க்) செயலால் போட்டியாளர்கள் பலரின் முகத்திரை கிழிந்து உண்மை முகம் தெரியவந்துள்ளது.

இருவருக்கு இடையே சண்டை ஏற்பட்டால், அதனை சுயநலமாகப் பயன்படுத்திக்கொண்டு போட்டியில் வெற்றிபெற நினைப்பவர்கள் யார்? சண்டையை உண்மையாக தடுக்க நினைப்பவர்கள் யார்? என்பவை தெரியவந்துள்ளன.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் 5வது வாரத்தில் பிராங்க் செய்ய பிக் பாஸ் அனுமதி கொடுத்தார். கமருதீன், பிரவீன்ராஜ் மற்றும் வைல்ட் கார்டு போட்டியாளரான ப்ரஜின் ஆகியோர் இணைந்து வாக்குவாதம் செய்து, அடித்துக்கொள்வதைப்போன்று பிராங்க் செய்தனர்.

எந்த இடத்திலும் நடிப்பு என்பதே தெரியாத வகையில் மிகவும் தத்ரூபமாக இருந்த இவர்களின் சண்டையால் பிக் பாஸ் வீட்டில் பரபரப்பு நிலவியது. பல போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைந்து சண்டையைத் தடுக்க முயன்றனர்.

சண்டை முடிந்த பிறகு இதனைப் பயன்படுத்தி கதாபாத்திரங்களை தவறாக சித்திரிக்கும் முயற்சியில் சில போட்டியாளர்கள் ஈடுபட்டனர். விஜே பார்வதி, வியானா, சுபிக்‌ஷா ஆகியோர் கமருதீனின், எதற்கெடுத்தாலும் கோபப்படுவதாகவும் பிக் பாஸ் போட்டியில் அவர் நீடிக்கத் தகுதியற்றவர் என்பதைப் போலவும் குறிப்பிட்டிருந்தனர்.

ஆனால், கானா வினோத் முற்றிலும் மாறுபட்டு உண்மையான அக்கறையுடன் கமருதீனிடமும் பிரவீனிடமும் பேசினார். பல கனவுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்துள்ளதாகவும், அந்தக் கனவை எட்டிப்பிடிக்க சந்தித்த அவமானங்களை நினைத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டில் தொடர வேண்டும் என அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

அக்கறையுடன் கண்டிக்கும் கானா வினோத்
அக்கறையுடன் கண்டிக்கும் கானா வினோத்படம் - எக்ஸ்

தனது நண்பனாக கமருதீனிடம் மட்டுமல்லாமல், சகோதரனைப் போல நினைக்கும் பிரவீனிடமும் உண்மையான அக்கறையுடன் கானா வினோத் பேசியது பலரை ஆச்சரியப்படுத்தியது.

''நான் கமருதீனுக்கு ஆதரவாகப் பேசுவதாக நினைக்க வேண்டாம். நீ எனக்கு தம்பி, அவன் எனக்கு நண்பன்'' என பிரவீனிடம் கானா வினோத் குறிப்பிட்டார். அவரின் இந்த வார்த்தைகள் பிக் பாஸ் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

இதையும் படிக்க | பிக் பாஸ் 9 நேரலையும் எடிட் செய்யப்படுகிறதா?

Summary

bigg boss 9 prank reveals gana vinoth true face

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com