

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மெளனம் பேசியதே தொடர் குறுகிய காலத்தில் நிறைவடைந்துள்ளது.
மெளனம் பேசியதே தொடர் கடந்தாண்டு நவம்பர் 4 ஆம் தேதி முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது.
இந்தத் தொடரின் பிரதான பாத்திரங்களில் அசோக், நடிகை ஃபெளசி ஆகியோர் நடித்து வந்தனர். இவர்களுடன் ஐரா அகர்வாலும் முக்கிய பாத்திரத்தில் நடித்து வந்தார்.
ரசிகர்கள் மத்தியிலும் டிஆர்பியிலும் முன்னிலையில் இருந்து வந்த மெளனம் பேசியதே தொடர், 303 எபிசோடுகளுடன் கடந்த வார இறுதியில் நிறைவடைந்தது.
காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வந்த மெளனம் பேசியதே தொடர், ஆரம்பித்து ஒரு ஆண்டே முழுமையடைந்துள்ள நிலையில் நிறைவடைந்துள்ளது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது.
மெளனம் பேசியதே தொடரின் இறுதிக்கட்டக் காட்சிகள் கடந்த சனிக்கிழமை ஒளிபரப்பு செய்யப்பட்டது. கிளைமேக்ஸ் காட்சியில் ஐரா அகர்வால் வீட்டை விட்டு வெளியேறுகிறார். ரசிகர்கள் யாரும் எதிர்பாராத காட்சிகளுடன் இந்தத் தொடர் நிறைவு பெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.