நடிகர்கள் தங்களின் சம்பளத்தைக் குறைவாக வாங்க வேண்டுமென விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ஆர்யன் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால், ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமங்களின் விற்பனையால் வணிக ரீதியாக வெற்றிப்படமானதாகவே தெரிகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் வெற்றி விழாவில் கலந்துகொண்ட விஷ்ணு விஷால், “ஒரு திரைப்படத்தின் வெற்றியும் தோல்வியும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரை மட்டுமே சார்ந்தது அல்ல. திரைப்படம் நன்றாக இல்லை எனச் சொன்னால் நடிகர்களைத்தான் திட்டுகிறார்கள். சினிமாவைப் பொறுப்புடன் பார்ப்பதால், என் படங்களில் கதை தொடர்பான விஷயங்களில் தேவைப்படும் மாற்றங்களைச் சொல்வேன். அதனால்தான், என்னால் வெற்றிப்படங்களைக் கொடுக்க முடிகிறது.” என்றார்.
மேலும், “தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுப்பதால் புதிய தயாரிப்பாளர்களுக்கு உங்களின் அறிவுரை என்ன?” எனக் கேட்கப்பட்டது.
அதற்கு விஷ்ணு விஷால், “யாருக்கும் அறிவுரை வேண்டாம். ஆனால், என் பரிந்துரையைச் சொல்கிறேன். நடிகர்கள் தங்களின் சம்பளத்தைக் குறைத்து வாங்குங்கள். அப்படியிருந்தால் மட்டுமே படத்தின் உருவாக்கத்திற்குச் செலவு செய்ய முடியும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிக்க: ஓடிடியில் பேட் கேர்ள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.