

நடிகர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் எச். வினோத் நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தின் எடிட்டிங் பணிகள் வரை முடிவடைந்ததுள்ளதால் உறுதியாக பொங்கல் வெளியீடாக அடுத்தாண்டு ஜன. 9 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
இதில், நாயகியாக பூஜா ஹெக்டேவும் முக்கிய கதாபாத்திரத்தில் மமிதா பைஜூவும் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைப்பில் உருவான முதல் பாடல் தீபாவளியன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கரூர் சம்பவத்தால் அது ஒத்திவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இப்படம் ஜன. 9 ஆம் தேதி வெளியாகும் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.
இதையும் படிக்க: காந்தா வாழ்வில் ஒருமுறை மட்டுமே அமையும் சினிமா: துல்கர் சல்மான்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.