

நடிகை யாமி கௌதம், நடிகர் எம்ரான் ஹாஸ்மி நடித்துள்ள ஹக் எனும் ஹிந்தி திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்தியா முழுவதும் இன்று (நவ.7) வெளியான இந்தப் படம் பெண்களின் உரிமையைப் பற்றி பேசுவதாக அமைந்துள்ளது.
ஜுங்லி பிக்சர்ஸ் வழங்கும் இந்தப் படத்தினை வினீத் ஜெயின் தயாரிக்க, சுபர்ன் எஸ் வர்மா இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் நாயகியாக யாமி கௌதம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
முத்தலாக் குறித்த படமாக உருவாகியுள்ள இவற்றுக்கு சமூக வலைதளங்களில் ஏகோபித்த ஆதரவு கிடைத்து வருகிறது.
இஸ்லாமிய மதத்தில் ‘தலாக்’ என்ற வாா்த்தையை மூன்று முறை கூறி மனைவிக்கு ஆண்கள் உடனடி விவாகரத்து வழங்கும் நடைமுறை செல்லாது என்று உச்சநீதிமன்றம் கடந்த 2017-ஆம் ஆண்டு தீா்ப்பளித்தது.
இது முஸ்லிம் பெண்களின் அடிப்படை உரிமை, சம உரிமைகளை மீறுவதாக உள்ளது என, கடந்த 2019-ஆம் ஆண்டில் ‘முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு சட்டம்’ எனும் முத்தலாக் தடைச் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்ததும் குறிப்பிடத்தக்கது.
நடிகை யாமி கௌதம், நடிகர் எம்ரான் ஹாஸ்மிக்கு ரசிகர்களிடம் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
நடிகை யாமி கௌதம் தமிழில் கௌரவம் படத்தில் அறிமுகமானார். தற்போது, ஹிந்தி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.