ரஜினிகாந்துக்கு இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கௌரவம்!

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கௌரவிக்கப்படுவது குறித்து...
நடிகர் ரஜினிகாந்த் (கோப்புப்படம்)
நடிகர் ரஜினிகாந்த் (கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

56 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கௌரவிக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவாவில், 56 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழா, வரும் நவ.20 முதல் நவ.28 ஆம் தேதி வரை நடைபெற்றவுள்ளது. இந்தியத் திரைப்பட விழாக்களில் முதன்மையான இவ்விழாவில் நாட்டின் முக்கிய திரைக்கலைஞர்கள் கௌரவிக்கப்படுவார்கள்.

இந்த நிலையில், இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நிகழ்ச்சியில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கௌரவிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதால், நடிகர் ரஜினிக்கு இந்த கௌரவம் வழங்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, இந்திய திரைப்பட விழாவில், மறைந்த திரைப்பட இயக்குநர்கள் குரு தத், ராஜ் கோஸ்லா, பானுமதி, ரித்விக் காதக், பூபென் ஹசாரிகா மற்றும் இசையமைப்பாளர் சலீல் சௌதரி ஆகியோரின் நூற்றாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளன.

முன்னதாக, இந்த விழாவில் 81 நாடுகளைச் சேர்ந்த 240-க்கும் அதிகமான படங்கள் திரையிடப்படுகின்றன. இதில், கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியான நடிகர் சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ திரைப்படமும் திரையிடப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ‘ஜனநாயகன்’: ‘தளபதி கச்சேரி’ பாடல் நாளை மாலை வெளியாகும் என அறிவிப்பு

Summary

It has been reported that superstar Rajinikanth will be honored at the 56th International Film Festival of India.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com