அது நான் இல்லை... ருக்மணி வசந்த் எச்சரிக்கை!

நடிகை ருக்மணி வசந்த் எச்சரிக்கையாக இருக்கச் சொல்லி பதிவு...
rukmini vasanth
ருக்மணி வசந்த்
Published on
Updated on
1 min read

நடிகை ருக்மணி வசந்த் எச்சரிக்கை பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

கன்னடத்தில் இரண்டு பாகங்களாக வெளியான ‘சப்த சாகரதாச்சே எல்லோ - சைட் ஏ', ‘சைடு பி’ ஆகிய படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ருக்மணி வசந்த். கன்னட ரசிகர்களை மட்டுமின்றி தமிழ், தெலுங்கு மொழிகளிலும் இந்தப் படம் கவனம் பெற்றது.

இதனை தொடர்ந்து நடிகை ருக்மணி வசந்த் தமிழில் விஜய் சேதுபதியுடன் ஏஸ் திரைப்படத்தில் நடித்தார். ஆனால், அப்படம் சரியான வரவேற்பைப் பெறவில்லை.

அதன்பின், மதராஸியில் நடித்து தமிழ் ரசிகர்களின் விருப்பமான நாயகி பட்டியலுக்குள் நுழைந்தார். இறுதியாக, இவர் நடித்த காந்தாரா சாப்டர் - 1 திரைப்படம் பான் இந்திய ஹிட் ஆனதுடன் ரூ. 850 கோடி வரை வசூலித்துள்ளது.

இந்த நிலையில், ருக்மணி வசந்த், ஒரு செல்போன் எண்ணைக் குறிப்பிட்டு அந்த எண்ணிலிருந்து யாரோ ஒருவர் தன்னைப் போல பேசி, அறிமுகமாகி பிறருடன் தொடர்பை ஏற்படுத்துவதாகவும் இது தான் அல்ல; இந்த எண்ணிலிருந்து அழைப்போ இல்லை செய்திகளோ வந்தால் பொருட்படுத்த வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார். மேலும், இது சைபர் கிரைம் குற்றம் என்பதால் அதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளாராம்.

actor rukmini vasanth posted about her cyber crime affect

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com