

நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் காந்தா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகிறார்.
நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். இவர் ஹிந்தியில் யாரியான் - 2 படம் மூலமே நடிகையாக சினிமாவுக்கு அறிமுகமானவர். நடிப்பாற்றலுடன் கூடிய அழகான தோற்றத்தால் பாக்யஸ்ரீக்கு தெலுங்கில் மிஸ்டர் பச்சான் மற்றும் கிங்டம் படங்களில் வாய்ப்பைப் பெற்றுக்கொடுத்தது.
தற்போது, காந்தா மூலம் தமிழ் சினிமாவுக்கு வருகிறார். இதில், நடிகையாகவும் துல்கரின் காதலியாகவும் நடித்திருக்கிறார்.
இப்படத்தின் டிரைலரில் 1950-களில் தோற்றத்தில் பிளாக் அண்ட் வெயிட் காட்சிகளில் வசனம் பேசியபடி அழும் காட்சியில் நல்ல நடிப்பையும் கொடுத்துள்ளதால் பாக்ஸ்ரீ மேல் கவனம் ஏற்பட்டுள்ளது.
காந்தா வெற்றி பெற்றால், பாக்யஸ்ரீ போர்ஸ் தமிழ்ப்படங்களில் ஒப்பந்தம் செய்யப்படுவார் என்பதால் அவரின் அடுத்தடுத்த படங்கள் குறித்து எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.