

நடிகர்கள் துல்கர் சல்மான், ராணா டக்குபதி சினிமா வாரிசுகளின் நிலை குறித்து பேசியுள்ளனர்.
நடிகர்கள் துல்கர் சல்மான், ராணா டக்குபதி நடித்த காந்தா திரைப்படம் நவ. 14 ஆம் தேதி திரைக்கு வருகிறது. மறைந்த நடிகர் தியாகராஜ பாகவதரின் கதையாக உருவான இப்படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பும் இருக்கிறது.
தற்போது, இப்படத்திற்காக துல்கர், ராணா நேர்காணல்களை அளித்து வருகின்றனர். அப்படியொரு, நேர்காணலில், “சினிமா வாரிசு நடிகராக இருப்பதில் நிறைய சாதகம் இருக்கிறதா?” எனக் கேட்கப்பட்டது.
அதற்கு, துல்கர் சல்மான், “உண்மையிலேயே, சினிமா வாரிசாக இருப்பதில் சாதகங்கள் இருக்கின்றன. ஆனால், எங்களுக்குக் கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தினால் மட்டுமே அது சாதகமானதாக இருக்கும். சில நேரங்களில் இதற்காகக் குறிவைக்கப்படுகின்றோம். அது பிரபலமாக இருந்தாலே வரக்கூடிய ஒன்றுதான்.” என்றார்.
ராணா டக்குபதி பேசும்போது, “எனக்கு தோல்வி இன்னொரு தேர்வு கிடையாது. மோசமான படத்தில் இருந்தால் அது எப்போதும் அங்கேயேதான் இருக்கும். அந்தத் தோல்வியை எதிர்கொண்டே ஆக வேண்டும். எங்களுக்கு சினிமா நிறைய கொடுத்திருக்கிறது. எனக்கு சினிமாதான் எல்லாவற்றையும் காண்பித்தது. உலகப்போரிலிருந்து பல விஷயங்களை நான் சினிமாவிலிருந்துதான் கற்றுக்கொண்டேன். அதனால், அதற்குச் சரியாக இருக்க வேண்டுமென நினைக்கிறேன்” என்றார்.
மேலும், சினிமா வாரிசுகள் புதியவர்களின் வாய்ப்பைக் கெடுக்கிறார்களா? என்கிற கேள்விக்கு, ராணா டக்குபதி, “புதியவர்களிடம்தான் புதிய கதைகளும் ஒரு வெறியும் இருக்கும். இந்தியாவில் சினிமா ஹாலிவுட் மாதிரி இல்லை. நமக்கு பல மொழித் திரைத்துறைகள் இருக்கின்றன.
மும்பையில், கேரளத்தில், தமிழகத்தில் சூழல்கள் எல்லாம் வேறு மாதிரியானவை. நாங்கள் இதன் வளர்ச்சிக்கான பயணத்தில் இருக்கிறோம். 1960, 70-களில் வீட்டை, சொத்தை இழந்தவர்களால்தான் இன்றைய சினிமாவின் வளர்ச்சியும் இருக்கிறது. சினிமா குடும்பத்தில் இல்லாதவர்களே இதற்கு பெரிய பங்களிப்புகளையும் செய்திருக்கின்றனர்” என்றார்.
இதையும் படிக்க: ஜன நாயகன் - கச்சேரியா? கேசரியா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.