

ஜன நாயகன் பாடலில் மமிதா பைஜூவின் செயின் கவனம் பெற்றுள்ளது.
ஜன நாயகன் திரைப்படத்தின் முதல் பாடலான தளபதி கச்சேரி நேற்று வெளியானது. அனிருத் இசையமைப்பில் அறிவு எழுதிய இப்பாடலை நடிகர் விஜய், அனிருத், அறிவு ஆகியோர் பாடியிருந்தனர்.
இப்பாடல் வெளியான 24 மணி நேரத்திலேயே பல லட்ச பார்வைகளையும் கருத்துகளையும் பெற்றுள்ளது. அதேநேரம், பாடலின் இறுதியில் அனிருத், விஜய்யிடம் ‘கடைசியா ஒரு டான்ஸ்..’ எனக் கேட்கிறார். அதற்கு விஜய் சரி என்கிறார்.
இந்த வசனம் இனி விஜய் திரைப்படங்களில் நடிக்க மாட்டார் என்பதையே குறிப்பதால் அவரது ரசிகர்களிடம் பெரிய வருத்தத்தையே ஏற்படுத்தியுள்ளது.
அதே நேரம், இப்பாடலில் நடிகை மமிதா பைஜூ இடம்பெறும் காட்சியும் கவனம் பெற்றுள்ளது. காரணம், ஜன நாயகன் திரைப்படம் பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என செய்திகள் வெளியாகின. ஆனால், இப்படம் ரீமேக் அல்ல என்றும் கூறப்படுகிறது.
தற்போது, பாடலில் பகவந்த் கேசரியில் ஸ்ரீலீலா அணிந்திருப்பதைப் போல் ஜன நாயகனின் மமிதாவும் ஒரு செயின் அணிந்திருக்கிறார். இதனால், ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.