கடவுள் ஒரு விதி எழுதினால், மக்கள் வேறு எழுதுகின்றனர்: பிக் பாஸ் பிரவீன்

கடவுள் ஒரு விதி எழுதினால் மக்கள் வேறு எழுதுகிறார்கள் என பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிரவீன் ராஜ் கருத்து..
பிக் பாஸ் வீட்டில் பிரவீன் ராஜ் /  பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகு...
பிக் பாஸ் வீட்டில் பிரவீன் ராஜ் / பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகு... படம் - எக்ஸ்
Published on
Updated on
2 min read

கடவுள் ஒரு விதி எழுதினால் மக்கள், திருத்தி வேறு எழுதுகிறார்கள் என பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிரவீன் ராஜ் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் 5 வது வாரத்தில் குறைந்த வாகுகளைப் பெற்றதற்காக பிரவின் ராஜ் தேவசகாயம், போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

போட்டிகளில் சிறப்பான பங்களிப்பை அளித்து, சிறந்த போட்டியாளர் என ஸ்டார்களை வென்ற பிரவீன் ராஜ், பலரும் எதிர்பாராத வகையில் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

தனக்கு கிடைத்த வாய்ப்பு இவ்வளவு சீக்கிரம் முடியும் என நினைக்கவில்லை என்று பிரவீன் ராஜ் பிக் பாஸ் வீட்டில் கதறி அழுது தனது உணர்வுகளை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில், பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகு பிரவீன் ராஜ் தனக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்து விடியோ பதிவிட்டுள்ளார்.

அதில், கடவுள் ஒரு விதியை நம் மீது எழுதினால், அதனை திருத்தி மக்கள் வேறு ஒன்றை எழுதுகிறார்கள் என மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் குறிப்பிட்டுள்ளார்.

பிரவீன் உருக்கமாக விடியோவில் பேசியதாவது,

''அனைவருக்கும் வணக்கம். நான் நலமுடனே இருக்கிறேன். பிக் பாஸிலிருந்து வெளியேறியதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மனமுடைந்துவிட்டேன். நாம் தவறு செய்துவிட்டோமோ, மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லையோ என்ற எண்ணம் தோன்றியது. அந்த உணர்ச்சியில் இருந்து வெளியேற என்னால் முடியவில்லை.

வெளியேற்றத்தின் மூலம் இருட்டைப் பார்த்துவிட்டேன் என நினைத்துக்கொண்டிருந்தேன், ஆனால், வெளியே வந்த பிறகு பலரும் என்மீது அன்பை பொழிகின்றனர். எனக்கு ஆதரவு தெரிவித்து வரும் ரசிகர்களுக்கு நன்றி. பிக் பாஸ் போட்டி கணிக்க முடியாததாகவேஉள்ளது.

ஒன்றை மட்டும் கூறிக்கொள்கிறேன், காலம் முழுக்க என் திறைமையை உங்களுக்கு விசுவாசமாக வெளிப்படுத்துவேன். இது ஒரு முடிவு என்று நினைத்தேன். ஆனால் உங்கள் அன்பு எனக்கு புதிய தொடக்கத்தைக் கொடுத்துள்ளது.

எனக்கு உறுதுணையாக இருந்ததற்கு மனமார்ந்த நன்றி. நான் அழவில்லை. இந்த நன்றி எப்போதும் என்னிடம் இருக்கும். என் மீது அக்கறை எடுத்து என்னை நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி. கடவுள் ஒரு விதியை எழுதினால், மக்கள் வேறொரு விதியை எழுதுகின்றனர். அது வேறு மாதிரி உள்ளது'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க | பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிரவீன்! எளிமையாக வரவேற்ற குடும்பம்!

Summary

Bigg boss 9 tamil Praveen raj devasagayam emotional video

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com