பிரதீப் ரங்கநாதனின் டியூட் திரைப்படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டியூட் திரைப்படம் விமர்சன ரீதியாகக் கலவையான விமரசனங்களைப் பெற்றாலும் வணிக ரீதியாக வெற்றிப்படமானது.
அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவான இப்படம், தமிழ் மற்றும் தெலுங்கில் சேர்த்து ரூ. 130 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
நடிகர் பிரதீப் ரங்கநாதனும் ஹாட்ரிக் வெற்றியைக் கொடுத்து முன்னணி நடிகர்களின் வரிசையில் இணைந்துள்ளார்.
மலையாள நடிகை மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்து பாராட்டுகளைப் பெற்றதுடன் சாய் அபயங்கரின் இசையும் கவனம் ஈர்த்திருந்தது.
இந்த நிலையில், டியூட் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வருகிற நவ. 14 ஆம் தேதி தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: நடிகர் அபிநய் காலமானார்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.