இதுதான் மன்னிப்பா? மீண்டும் யூடியூபரை விளாசிய கௌரி கிஷன்!

மன்னிப்பு கேட்ட யூடியூபருக்கு கௌரி கிஷன் பதில்...
gouri kishan
கௌரி கிஷன்
Published on
Updated on
1 min read

உடல் எடை குறித்த கேள்விக்காக மன்னிப்பு கேட்ட யூடியூபருக்கு நடிகை கௌரி கிஷன் பதிலளித்துள்ளார்.

அண்மையில் செய்தியாளர்கள் சந்திப்பில் யூடியூபர் ஒருவர் நடிகை கௌரி கிஷனின் உடல் எடை குறித்து கேள்வியெழுப்பினார். இக்கேள்விக்கு அப்போது கௌரி கிஷன் பதிலளிக்காமல் முகத்தைச் சுளித்தார்.

தொடர்ந்து, அதெர்ஸ் திரைப்படத்தின் சிறப்பு திரையிடலின்போது அந்த யூடியூபரை பார்த்த கௌரி கிஷன், “ஒரு நடிகையின் உடல் எடையைத் தெரிந்து வைத்து என்ன செய்யப்போகிறீர்கள்? ஒருவரின் தோற்றத்தைக் குறித்த கேள்விகளை அனுமதிக்கக்கூடாது. நீங்கள் பத்திரிகையாளரே இல்லை. அத்துறைக்கு அவமதிப்பை ஏற்படுத்துகிறீர்கள்” என வெளுத்து வாங்கினார்.

இதற்கு, அந்த யூடியூபர் மன்னிப்பு கேட்டு விடியோ ஒன்றை வெளியிட்டார்.

தற்போது, அந்த விடியோவைப் பகிர்ந்த கௌரி கிஷன், “பொறுப்புணர்வில்லாத மன்னிப்பு என்பது மன்னிப்பே அல்ல.
முக்கியமாக, “அவள் (கௌரி) கேள்வியைத் தவறாகப் புரிந்துகொண்டாள்; அது ஜாலியான கேள்விதான்,” அல்லது அதைவிட மோசமாக, “நான் யாரையும் உடல் ரீதியாக அவமதிக்கவில்லை” எனச் சொல்லி தட்டிக்கழிப்பதும் மிகப்பெரிய பிரச்னைதான்.
நான் தெளிவாகச் சொல்கிறேன். மேடைத்தனத்துடன் கூடிய போலி மன உறுதி அல்லது வெறும் வார்த்தைகளால் வெளிப்படும் மன்னிப்பை நான் ஏற்கமாட்டேன். சரியாக நடந்து கொள்ளுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

கௌரி கிஷனின் இக்கருத்துக்கும் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதேநேரம், அந்த யூடியூபர் வருத்தம் தெரிவிப்பதாகவே அந்த விடியோவில் கூறுகிறார். ஏன் மன்னிப்பு என்கிற வார்த்தையைப் பயன்படுத்த மாட்டாரா என கேள்விகளும் எழுந்துள்ளன.

Summary

actor gouri kishan slams again youtuber who asked her weight in press meet

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com