கார்த்திக் சுப்புராஜின் 10-வது படம் துவக்கம்!

கார்திக் சுப்புராஜின் புதிய படம் ஆரம்பம்...
தயாரிப்பாளர்களுடன் கார்த்திக் சுப்புராஜ்
தயாரிப்பாளர்களுடன் கார்த்திக் சுப்புராஜ்
Updated on
1 min read

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தன் அடுத்த படத்தின் படப்பிடிப்பைத் துவங்கியுள்ளார்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இறுதியாக இயக்கிய ரெட்ரோ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது, அடுத்த படத்திற்கான வேலைகளைத் துவங்கியுள்ளார். இது கார்த்திக் சுப்புராஜின் 10-வது படமாக உருவாகவுள்ளது.

இதனை, ஆஸ்கர் விருதுபெற்ற எலிபேண்ட் விஸ்பரஸ் (The Elephant Whisperer) ஆவணப்படம் மற்றும் சூரரைப்போற்று ஆகிய படங்களைத் தயாரித்த சிக்யா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து கார்த்திக் சுப்புராஜ் இப்படத்தை தயாரிக்கவும் செய்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் இன்று துவங்கியுள்ளது. இதன், தொழில்நுட்பக் குழு மற்றும் நடிகர்கள் குழு விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

karthik subbaraj's 10th film shoots start today in madurai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com