நடிகர் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ திரைப்படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியுள்ளன.
நடிகர் சிவகார்த்திகேயன் - இயக்குநர் சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகிவரும் ‘பராசக்தி’ திரைப்படம், வரும் 2026 ஜனவரி 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
நடிகர்கள் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்துக்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
இந்த நிலையில், பராசக்தி திரைப்படத்தின் ரவி மோகனுக்கான டப்பிங் பணிகள் துவங்கியுள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. திட்டமிட்டபடி பணிகள் நடைபெற்று வருவதால் வெளியீட்டில் மாற்றம் இருக்காது என்றே தெரிகிறது.
இதையும் படிக்க: இதுதான் மன்னிப்பா? மீண்டும் யூடியூபரை விளாசிய கௌரி கிஷன்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.