பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல்முறையாக தொகுப்பாளர் விஜய் சேதுபதி ஞாயிற்றுக்கிழமை குறும்படம் திரையிட்டார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி 5 வாரங்களைக் கடந்துள்ளது. கடந்த வார இறுதி நிகழ்வு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது.
இந்த சீசனில் முதல்முறையாக இந்த வாரம் அதிரடியாக இரண்டு போட்டியாளர்கள் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டனர். சனிக்கிழமை நிகழ்வில் துஷாரும், ஞாயிற்றுக்கிழமை பிரவீனும் மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளைப் பெற்று வெளியேறினர்.
இந்த நிலையில், பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியை முதல் 7 ஆண்டுகள் தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன், அடிக்கடி குறும்படத்தை வெளியிட்டு போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி அளிப்பார்.
கடந்த இரண்டு சீசன்களாக பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி, இதுவரை குறும்படத்தை திரையிட்டது கிடையாது. இந்த நிலையில், நேற்றைய நிகழ்வில் முதல்முறையாக திரையிட்டார்.
வார நாள்களில் போட்டியாளர்களுக்கு ஹோட்டல் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அப்போது வைல்டு கார்டு போட்டியாளராக வீட்டுக்குள் நுழைந்த சாண்ட்ராவை அழைத்த பிக் பாஸ், ரகசிய டாஸ்க் ஒன்றை கொடுத்தார்.
யாருக்கும் தெரியாமல், ஹோட்டல் டாஸ்க்கில் ஈடுபடும் இருவரை அவர்கள் பணியில் இருந்து மாற்ற வைக்க வேண்டும். அல்லது ராஜிநாமா செய்ய வைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த டாஸ்க்கிற்காக வீட்டில் உள்ள போட்டியாளர்களை பகைத்துக் கொண்டு, வெற்றிகரமாக சாண்ட்ராவும் செய்து முடிப்பார். இதன்விளைவாக, கடந்த வாரம் சரியாக விளையாடாத போட்டியாளர் எனத் தேர்வு செய்யப்பட்டு சிறைக்கும் அனுப்பப்பட்டார்.
இந்த நிலையில், நேற்று குறும்படம் திரையிடப்பட்டு, சாண்ட்ராவுக்கு அளிக்கப்பட்ட ரகசிய டாஸ்க் குறித்து சக போட்டியாளர்களுக்கு விளக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.