

தில்லி கிரைம் - 3 இணையத் தொடரின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தில்லி கிரைம் இணையத் தொடரின் முதல் பாகம் தில்லியில் நடந்த 'பேபி ஃபாலக்' என்ற உண்மைச் சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்டது.
இதில் 2 வயது குழந்தையை மையப்படுத்தி அடுத்தடுத்து பாகங்கள் எடுக்கப்பட்டது.
இந்தத் இணையத் தொடரின் முதல் இரண்டு பாகங்கள் எடுக்கப்பட்டு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து, மூன்றாம் பாகம் எடுக்கப்படுகிறது.
முந்தைய பாகங்களில் நடித்த ஷெஃபாலி ஷா டிஐஜி வர்திகா சதுர்வேதியாக நடிக்கிறார். ஹுமா குரேஷி புதிய வில்லியாக பாடி தீதி பாத்திரத்தில் நடிக்கிறார்.
கிரைம் திரில்லர் பாணியில் எடுக்கப்பட்டுள்ள தில்லி கிரைம் - 3 இணையத் தொடர் வரும் நவ. 13 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ராஜமௌலி - மகேஷ் பாபு படத்தில் பாடிய ஷ்ருதி ஹாசன்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.