

சின்ன திரை நடிகை பாவனி தனத் கணவருடன் சேர்ந்து சொந்தமாக வீடு கட்டியுள்ளார். புதிய வீட்டின் கட்டுமானப் பணிகளை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ள அவர், இதனை புதிய தொடக்கம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
சின்ன திரை தம்பதிகளான அமீர் - பாவனி இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். கடந்த ஏப்ரல் மாதம் இவர்களின் திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது.
தற்போது கணவன் - மனைவியாக வாழ்ந்துகொண்டிருக்கும் இவர்கள் சொந்தமாக வீடு ஒன்றைக் கட்டியுள்ளனர். இதன்மூலம் தங்கள் நீண்ட நாள் கனவை நனவாக்கியுள்ளனர்.
வீட்டின் கட்டுமானப் பணிகள் முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வீட்டின் முன்பு நின்றவாறு பாவனி புதிய படத்தைப் பகிர்ந்துள்ளார். பாவனிக்கும் அமீருக்கும் ரசிகர்கள், பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அமீர் - பாவனி காதல்
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாகப் பங்கேற்ற பாவனியிடம், வைல்டுகார்ட் மூலம் போட்டியில் நுழைந்த அமீர், தனது காதலை அச்சமின்றி வெளிப்படுத்தினார்.
பிக் பாஸ் டிஆர்பிக்காக இவ்வாறு செய்யப்படுகிறது என பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், நிகழ்ச்சிக்கு பின்னரும் பாவனி மீது அதே அளவு அமீர் காதல் கொண்டிருந்தார்.
இதனால் திரையில் மட்டுமின்றி நிஜ வாழ்விலும் இருவரின் காதலுக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மரியாதையும் மதிப்பும் கிடைத்தது.
இருவரும் இணைந்து நடிகர் அஜித் குமாரின் துணிவு படத்தில் நடித்திருந்தனர். அப்படத்தில் இருவரின் பாத்திரங்களும் வெகுவாக பாராட்டப்பட்டது.
கூட்டு உழைப்பில் வீடு
சின்ன திரை நடிகையான பாவனி, ரெட்டை வால் குருவி தொடரில் தமிழில் அறிமுகமானார். இதற்கு முன்பு தெலுங்கு மொழியில் 3 தொடர்களில் பாவனி நடித்திருந்தார்.
தமிழில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பாசமலர், சின்னத் தம்பி, நீலக்குயில், ராசாத்தி உள்ளிட்டத் தொடர்களில் நடித்து புகழ் பெற்றார்.
இதேபோன்று, தொழில்முறை நடனக் கலைஞரான அமீர், நடனத்தில் முழுவதும் கவனம் செலுத்திவருகிறார். இருவரும் தங்கள் துறைகளில் கவனம் செலுத்தி வரும் நிலையில், கூட்டு முயற்சியால் தற்போது வீடு கட்டியுள்ளனர்.
இதையும் படிக்க | சீரியல் முடிந்ததும் சீனாவுக்குச் சென்ற நடிகை ஷோபனா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.